15 May 2018

விந்தையில் விந்தையை வந்து பாராய் - மா

விந்தையில் விந்தையை வந்து பாராய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

20.         இராகம் இங்கிலிஷ்

 

1.       விந்தையில் விந்தையை வந்து பாராய் - மா

            சுரந்த வேந்தனார் தேவமைந்தன்

            கந்தை பொதிந்து சிசுவானார்

 

                             பல்லவி

 

                        அற்புதம் அற்புதம் அற்புதமே - திகழ்

                        பொற்பரா தற்பரன் அற்பமான

                        கற்பத்தி லுற்பத்தியானது பார்

 

2.         பண்டு முறை உரைவிண்ட படி - பூ

            மண்டலத் தொண்டர்கள் கண்டிடவே - விண்

            மண்டலமிறங்கி உதித்தனரே - அற்புதம்

 

3.         ஜெகத்தில் பெத்தலைப் புல்லணையில் - மா

            மகத்தவமான மனுவேலனார்

            அமுதுக்கழுத கோலத்தைப் பார் - அற்புதம்

 

4.         தாவினில் பாவிகளானவரை - ஆ

            தாவி மீட்கவென்று தாவீதினூர்

            ஆவிடைப் பிறந்தார் சேவியுங்கள் - அற்புதம்

 

5.         துங்க தூதர் சங் கம்களித்து - சுப

            மங்கள தீங்கவி எங்கெங்குமே

            இங்கிதம் முழங்க ஆர்ப்பரித்து - அற்புதம்

 

6.         ஆயர்கள் நாயனைக் காணவென்று

            ஆயத்தமாய் விரைவாகுகின்றார்

            நேயதாயின் தூயசேனையே - அற்புதம்

 

7.         சாஸ்திரிமார்கள் தம் ஆஸ்தியுடன் - பிர

            வேசித்து கிறிஸ்து சமஸ்தனையே

            நமஸ் கரித்தார் ஈசாயின் வேரை - அற்புதம்

 

8.         வந்தம் வந்தனம் ஏசையர்க்கே

            சந்தத வந்தனம் வந்தனமே

            வந்தார் இயேசு மகாராஜனே - அற்புதம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...