நெஞ்சமே கெத்சமேனக்கு நீ நடந்து வந்திடாயோ


73.                                                                               (304)

கண்ணிகள்

1.       நெஞ்சமே கெத்சமேனக்கு  நீ நடந்து வந்திடாயோ

            சஞ்சலத்தால் நெஞ்சுருகி தயங்குகின்றார் ஆண்டவனார்

2.         ஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார்
            தேற்றுவாரிங்காருமின்றி தியங்குகின்றார் ஆண்டவனார்

3.         தேவகோபத் தீச்சூளைபில் சிந்தை நொந்து வெந்துருகி
            ஆவலாய் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே

4.         அப்பாபிதாவே இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்
            எப்படியும் நின்சித்தம்போல் எனக்கா கட்டும் என் கின்றாரே

5.         இரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே
            குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதைஏனோ

6.         வானத்திலிருந்தோர் தூதன் வந்தவரைப் பலப்படுத்த
            தானதிகச்சஞ்சலத்தால் முழந்தாளிட்டு வேண்டுகிறார்

7.         தாங்கொணா நித்திரைகொண்டுதன் சீஷர்கள் உறங்கிவிழ
            அங்கவர் தனித்திருந்து அங்கலாய்த்து வாடுகின்றார்

8.         சுத்த நீதியுள்ளவரை சொற்ப பண ஆசையாலே
            முத்தமிட்டு வாழ்கவென்று முன்னோனை விற்றானேயூதாஸ்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே