சிலுவைதனில் உயிர் பிரிய திருமகனார் முகநோக்கி
75. (60)
7-ஆம் வார்த்தை
ஒப்பாரி
1. சிலுவைதனில்
உயிர் பிரிய திருமகனார் முகநோக்கி
தேவ அன்னையும் கூவி அழுதாள் - வெகுவாய்
2. உலகமதிலிருசோரர் நடுவாக மரமீதில்
உறங்குவதும் சுகமாச்சுதோ - மகனே, மகனே
3. ஐயாயிரர் பசியை அமர்த்தி அரவணைத்த
அருட்கை அயர்ந்து சோர்ந்ததுவோ - மகனே,
மகனே
4. பல பல பேரவமாக சரசமோடு தாராட்ட
பாங்குதனில் நித்திரையானீரோ - மகனே, மகனே
5. சங்கிலி துரட்டி கசைவார்முள் பிரம்படியால்
சரீர பெலவீனமானீரோ - மகனே, மகனே
6. ஆங்குமுன் சொற்படி சோர்வை எல்லாம் திரண்டு
அம்புவியில் வெம்பினேனே - மகனே, மகனே
7. காவைதனிலே யேவைகனிதின்ற பாவமதால்
காடியோ குடித்தீரையா - மகனே, மகனே
Comments
Post a Comment