25 May 2018

மேகமீது தூதரோடிதோ இதோ


101. செஞ்சுருட்டி    ஆதிதாளம்         (85)

1.       மேகமீது தூதரோடிதோ இதோ
            மேசையா கிறிஸ்தேசையா என் தாசை நேசையா
            வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய்

2.         மேகத்தோடு போனவரிவர் இவர்
            திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திட
            சீக்கிரம் சீக்கிரம் ஜெகத்தை நோக்கியே

3.         ஆரவாரம் கேட்குதே அதோ அதோ
            ஆட்டுக்குட்டியின் பாட்டோ டெக்காளம் மதிர்ந் தொலிக்குதே
            அல்லேலூயா அருமைரட்சகா

4.         ஒலிவ மலைவிட்டேகினார் அப்போ அப்போ
            உருவத்தோடவர் திரும்பி வாரதை உற்று நோக்குவோம்
            ஓடிப் பாடி உவந்து போற்றுவோம்

5.         மனுவேலன்ராஜன் வருகிறார் ஒரே ஒரே
            மலை அதிர்ந்திட புவி குலுங்கிட கடல் கலங்கிட
            வானோர் பூவோர் வணங்கி நிற்கிறார்

6.         இயேசுராஜன் புறப்பட்டார் ஜெய ஜெயா
            ஜெக மலைகடலுள் நல்லோர் உயிர்த்தெதிர்த் சென்றேகினார்
            நாடி நாடி பாரத்தை நோக்கியே

7.         ஏதேன் பரதீசு பார் அதோ அதோ
            இயேசுவும் அவர் தேவியும் அங்கு கூடி வாழுகிறார்
            இல்லை தொல்லை என்றும் பாக்கியம்              

1 comment:

  1. Fourth stanza has few wrong words ..pls change it

    ReplyDelete

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...