உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

            வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன்

            அடைக்கலமும்  கேடகமும் நீரே எனக்கு

            புகலிடமும் தஞ்சமும்  நீரே எனக்கு - (என்)

            புகலிடமும் தஞ்சமும்  நீரே எனக்கு - 2

 

                        மறைவிடமே என் உறைவிடமே

                        நான் நம்பியுள்ள என் கன்மலையே - 2

 

 

1.         தீங்கு நாட்களில் என்னை மறைத்து கொள்கிறீர்

            உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர் - 2

            கேடகம் நீரே என் மகிமையும் நீரே

            என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே - 2 - மறைவிடமே

 

2.         உம்மை நோக்கி கூப்பிடும்போது

            எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர் - நான் - 2

            ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர்

            என்னைத் தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர் - 2 - மறைவிடமே

 

3.         நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர்

            உம் காருண்யத்தினால் சூழ்ந்து கொள்கிறீர் - 2

            இரட்சிப்பு நீரே, என் இரட்சகர் நீரே

            நான் சுகமாய் வாழ, காரணர் நீரே - 2 - மறைவிடமே

 

 

- Bro. RAVI IMMANUEL

 

 

https://www.youtube.com/watch?v=oaf3o05qyrg

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Post a Comment

Popular posts from this blog

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே