21 August 2024

எத்தனை பேர் என்னை துரத்தினாலும்

எத்தனை பேர் என்னை துரத்தினாலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          எத்தனை பேர் என்னை துரத்தினாலும்

            அத்தனை பேரின் முன்னாடி

            என்னை உயர்த்தி வைத்து ஆசீர்வதிப்பாரே

            எத்தனை பேர் என்னை பேசினாலும்

            அத்தனை பேரின் முன்னாடி

            என்னை சாட்சியாக நிறுத்தி வைப்பாரே

 

                        எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்

                        அப்பக்கம் பெருக செய்வாரே

                        முடிந்ததென்று யார் நினைத்தாலும்

                        முடிவிலிருந்து ஆரம்பிப்பாரே

 

                        என் பிரச்சனையை பார்க்கிலும்

                        என் தேவன் பெரியவர்

                        என் தேவைகளைப் பார்க்கிலும்

                        என் தேவன் பெரியவர் - 2

 

1.         உலகம் மொத்தமும் நம்மை எதிர்த்து வந்தாலும்

            உலகத்தை படைச்சவர் நம் பக்கம் இருக்காரே

            வெள்ளம் போல் சத்துரு நம்மை சூழ்ந்துக் கொண்டாலும்

            நமக்காய் கர்த்தர் என்றும் யுத்தம் பண்ணுவாரே - 2 - எப்பக்கம்

 

2.         பின்மாற்றம் அடைந்து வழி மாறிப்போனாலும்

            மறு வழி காட்டிட என்னை தேடி வருவாரே

            எல்லாமே இழந்து நான் வெறுமையானாலும்

            திரும்பவும் என்னை நிரம்பி வழியச் செய்வாரே - 2 - எப்பக்கம்

 

 

- Ps. Reenu Kumar

 

 

https://www.youtube.com/watch?v=cXbwofpHXEc

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...