17 August 2024

இயேசுவை நீ அறிவாயே பாரத தேசமே

இயேசுவை நீ அறிவாயே பாரத தேசமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          இயேசுவை நீ அறிவாயே பாரத தேசமே - 2

 

                        பாவத்தின் பரிகாரியை

                        லோகத்தின் ரட்சகரை 

                        அவர் அன்றி வேறொரு தெய்வம் பூமியில் இல்லையே

                        அவர் போல சிலுவையில் மரித்தவர் எவரும் இல்லையே - இயேசுவை நீ

 

1.         “ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;

            எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்

            பாரதியும் ஏசுவை அறிந்து

            கவியும் பாடினாரே - 2

 

            மண்ணிடை   இயேசு மறுபடி வருவார்

             என்பது சத்தியமே!”

            கண்ணதாசனும் ஏசுவை அறிந்து

            காவியம் எழுதினாரே - 2

 

            நசரேயன் ஏசுவின் நாட்களில் நான்

            அங்கே வாழ்ந்திருந்தால்

            அவர் பாதத்தை கண்ணீரால் அல்ல

            இதயத்தின் இரத்தத்தால் கழுவியிருப்பேன்” - 2

            விவேகானந்தரும் ஏசுவை அறிந்து கூறியது - 2 - இயேசுவை நீ

 

2.         இயேசு ஊழியம் கொள்ள வராமல்

            ஊழியம் செய்திட வந்தாரென்று

            ஐடா ஸ்கடரும் ஏசுவை அறிந்து

            தன்னை அர்ப்பணித்தார் - 2

 

            இந்திய பெண்களை மாற்றி உயர்த்திட

            இயேசுவை தவிர யாரும் இல்லை

            ராமாபாயும் ஏசுவை அறிந்து

            சொல்லிய வார்த்தை இதே - 2

 

            கிறிஸ்து இயேசுவை ஒவ்வொரு நாளும்

            மாறுபட்ட வேடத்தில் பார்த்தேன்

            ஒவ்வொரு மனிதரில்  இயேசுவை பார்த்து

            அவருக்கே தொண்டு செய்கிறேன்” - 2

            அன்னை தெரேசாவும் ஏசுவை அறிந்து கூறியது - 2 - இயேசுவை நீ

 

 

- Sherwin Joshua

 

 

https://www.youtube.com/watch?v=zinV1cmXLbU

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...