24 April 2020

அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்

நிஜீ.கீதங்கள்:1961-1929

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download2222

 

 

 

 

இராகம்: தால்லி                                                                தாளம்: ஆதி

 

                             பல்லவி

 

                   அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்

                        தேவ பாலனை

 

                             அனுபல்லவி

 

            தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த - எம்

            மேசியா இயேசுவைப் போற்றி

 

                             சரணங்கள்

 

1.         ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடி

            ஆர்ப்பரிப்போமின்று கூடி,

            தீன பந்தா மெம் திவ்விய னேசுவை

            தினமதில் துதிப்போம் கொண்டாடி - அக

 

2.         தேவதிருச் சுதன் இயேசு நமக்காய்

            ஈன வுருவ மெடுத்தார்

            ஏவையின் பாவ வேரையறுத் தெமக்

            கினிய இரட்சையுமளித்தார் - அக

 

3.         பூவுலகோருக்குப் புண்ணியனிவரே!

            மேலுலகோருக்கும் கோனே!

            பாவிகள் மோட்சப் பதவியடைந்திட

            தாவியிப் புவியில் வந்தாரே - அக

 

 

- P. Nalla Thambi

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

அக்கினியை ஊற்றுங்கப்பா

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அக்கினியை ஊற்றுங்கப்பா

            அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா

            பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய (2)

            எந்தன்மேல் ஊற்றுங்கப்பா (2)

 

                        ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உம் வல்லமையை

                        தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே

 

1.         பெந்தெ கோஸ்தே நாளில் அன்று ஊற்றினீரே

            எந்தன்மேலே இந்த வேளை ஊற்றிடுமே - ஊற்றும்

 

2.         நீச்சலாளம் கொண்டுசென்று நீந்த செய்வீரே

            நீந்தி நீந்தி மூழ்க என்மேல் ஊற்றிடுமே - ஊற்றும்

 

3.         மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்றீர்

            மாம்சமான எந்தன்;மேலே ஊற்றிடுமே - ஊற்றும்

 

4.         அக்கினியை போடவந்தேன் என்று சொன்னீரே

            பற்றியெரிய எந்தன் மேலே ஊற்றிடுமே - ஊற்றும்

 

 

- Pastor. David

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

அக்கினியை போட வந்தீரே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அக்கினியை போட வந்தீரே

            பற்றி எரிய வேண்டும் என்றீரே

            இயேசையா உங்க விருப்பம்

            இப்போ என்னிலே நிறைவேறட்டும்

 

                        அக்கினி அபிஷேக அக்கினி

                        இறங்கட்டும் என் மேலே

                        நிரப்பட்டும் இப்போதே

 

1.         மேல்வீட்டு அறையினிலே இறங்கின அக்கினி

            எங்கள் மத்தியிலே இப்போ இறங்கட்டுமே

            அக்கினி நாவுகள் அமரட்டும் இப்போது

            பற்பல பாஷைகளை பேசிட செய்யட்டுமே

 

2.         என்னை கேட்டருளும் என்று எலியா ஜெபித்த போது

            இறங்கின அக்கினி இப்போ என்மேல் இறங்கட்டுமே

            அவியாத அக்கினி எரியட்டும் உள்ளங்களில்

            எழுந்து ஜீவாலிக்கவே இப்போ எண்ணை ஊற்றிடுமே

 

3.         சீனாய் மலையினிலே இறங்கின அக்கினி

            சீயோன் சபைதனிலே இறங்கட்டும் இப்போதே

            அக்கினி புகைக்கடாய் நிரம்பட்டும் இப்போதே

            மலைமேல் பட்டணமாய் ஒளிரச் செய்யட்டுமே

 

 

- Pastor. David

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...