Posts

Showing posts from June, 2013

ஜெயம் ஜெயம் அல்லேலூயா

நூற்றாண்டு கீதங்கள் 387 கீதங்களும் கீர்த்தனைகளும் 275 கன்வென்சன் 42 நித்திய ஜீவன் பாடல்கள் 1217 பாடல் - ஜெயம் ஜெயம் அல்லேலூயா             ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்             யேசுநாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும். 1. உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்     எல்லோரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன் 2. பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா     பிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா 3. பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காத்திராதே     ரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா 4. நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் என்றாரே     நாதன் கிறிஸ்துவண்டை பாவியே ஓடிவா

நான் உம்மைப் பற்றி ரட்சகா

நூற்றாண்டு கீதங்கள் 319 கீதங்களும் கீர்த்தனைகளும் 128 கன்வென்சன் 289 நித்திய ஜீவன் பாடல்கள் 1219 S.S. 883                          At the Cross 1.       நான் உம்மைப் பற்றி ரட்சகா              வீண் வெட்கம் அடையேன்              பேரன்பைக் குறித்தாண்டவா              நான் சாட்சி கூறுவேன். பல்லவி                          சிலுவையண்டையில்                          நம்பி வந்து நிற்கையில்                          பாவப் பாரம் நீங்கி, வாழ்வடைந்தேன்                           எந்த நேரமும் என துள்ளத்திலும்                          பேரானந்தம் பொங்கிப் பாடுவேன். 2.           ஆ! உந்தன் வல்ல நாமத்தை              நான் நம்பிச் சார்வதால்              நீர் கைவிடீர் இவ்வேழையைக்              காப்பீர் தேவாவியால் 3.           மா வல்ல வாக்கின் உண்மையைக்              கண்டுணரச் செய்தீர்              நான் ஒப்புவித்த பொருளை              விடாமல் காக்கிறீர் 4.           நீர் மாட்சியோடு வருவீர்              அப்போது களிப்பேன்              ஓர் வாசஸ்தலம் கொடுப்ப

அருள் ஏராளமாய் பெய்யும்

S.S. 306           1.        அருள் ஏராளமாய் பெய்யும்                         உறுதி வாக்கிதுவே!                         ஆறுதல் தேறுதல் செய்யும்                         சபையை உயிர்ப்பிக்குமே பல்லவி                                     அருள் ஏராளம்                                     அருள் அவசியமே                                     அற்பமாய் சொற்பமாயல்ல                                     திரளாய் பெய்யட்டுமே             2.          அருள் ஏராளமாய்ப் பெய்யும்                         மேகமந்தார முண்டாம்                         காடான நிலத்திலேயும்                         செழிப்பும் பூரிப்புமாம்                 - அருள்             3.          அருள் ஏராளமாய் பெய்யும்                         இயேசு! வந்தருளுமேன்!                         இங்குள்ள கூட்டத்திலேயும்                         க்ரியை செய்தருளுமேன்.           - அருள்             4.          அருள் ஏராளமாயப் பெய்யும்                         பொழியும் இச்சணமே                         அருளின்

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா?

S.S.379 1.         பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா?              ஒப்பில்லா திருஸ்நானத்தினால்              பாவதோஷம் நீங்க நம்பினீர்களா?              ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால் பல்லவி                          மாசில்லா-சுத்தமா                          திருப்புண்ணிய தீர்த்தத்தினால்                          குற்றம் நீங்கிவிட குணம்மாறிற்றா                          ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால் 2.           பரலோக சிந்தை அணிந்தீர்களா              வல்ல மீட்பர் தயாளத்தினால்              மறு ஜன்ம குணமடைந்தீர்களா              ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால் 3.           மணவாளன் வரக்களிப்பீர்களா              தூய நதியின் ஸ்நானத்தினால்              மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா              ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால் 4.           மாசு கரை நீங்கும் நீசப்பாவியே              சுத்த ரத்தத்தின் சக்தியினால்              முத்திப் பேறுண்டாகும் குற்றவாளியே              ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்

கரை ஏறி உமதண்டை

நூற்றாண்டு கீதங்கள் 264 கீதங்களும் கீர்த்தனைகளும் 267 நித்திய ஜீவன் பாடல்கள் 542 S.S. 789 1. கரை ஏறி உமதண்டை     நிற்கும் போது ரட்சகா!     உதவாமல் பலனற்று     வெட்கப்பட்டுப் போவேனோ?                          பல்லவி         ஆத்துமா ஒன்றும் ரட்சிக்காமல்         வெட்கத்தோடே ஆண்டவா!         வெறுங்கையனாக உம்மைக்         கண்டு கொள்ளல் ஆகுமா? 2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை     வைத்திராமல் சோம்பலாய்க்     காலங்கழித்தோர் அந்நாளில்     துக்கிப்பார் நிர்ப்பந்தராய் 3. தேவரீர் கை தாங்க சற்றும்     சாவுக்கஞ்சிக் கலங்கேன்     ஆயினும் நான் பலன் காண     உழைக்காமற் போயினேன்! 4. வாணாள் எல்லாம் வீணாளாகச்     சென்று போயிற்றே, ஐயோ!     மோசம் போனேன்!     விட்ட நன்மை     அழுதாலும் வருமோ? 5. பக்தரே உற்சாகத்தோடு     எழும்பிப் பிரகாசிப்பீர்!     ஆத்துமாக்கள் இயேசுவண்டை     வந்து சேர உழைப்பீர்

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

நூற்றாண்டு கீதங்கள் 248 கீதங்களும் கீர்த்தனைகளும் 588 கன்வென்சன் 56 நித்திய ஜீவன் பாடல்கள் 254 S.S.873 1.       ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா,              ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்.              ஜெபத்திலே தரித்திருந்து,              ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர். பல்லவி                          ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்                          ஜீவியத்திற்கிதுவே சட்டம்                          ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்                          ஜீவியத்திற்கிதுவே சட்டம் 2.           ஊக்கத்துடனே ஓர் முகமாய்              வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு              நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி              கேட்கும்படி கிருபை செய்வீர்                  - ஜெபமே 3.           ஆகாத நோக்கம் சிந்தனையை              அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு              வாகானதாக்கும் மனமெல்லாம்              வல்லமையோடு வேண்டிக்கொள்வோம்    - ஜெபமே 4.           இடைவிடாமல் ஜெபம் செய்ய              இடையூறெல்லாம் நீக்கிவிடும்              சடைப்பில்லாமல் உந்