Posts

Showing posts from January, 2022

நீதிமானின் கூடாரத்தில கெம்பீரச் சத்தம்

Image
நீதிமானின் கூடாரத்தில கெம்பீரச் சத்தம் மேலும் அதிக பாடல்களுக்கு                             நீதிமானின் கூடாரத்தில கெம்பீரச் சத்தம்                         யாக்கோபின் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்                         தம்புற கின்னர வீணையோடு துதிகள் ஆயிரம்                         நான் துதிக்கும் நாவு எழுப்பிடுதே இனிய சங்கீதம்   1.          பறவைப் பாடுதே நீ பாடக்கூடாதா             அந்த இயற்கை துதிக்குதே நாம் துதிக்கக்கூடாதா             நம் பாடு மரணம் ஏற்க இயேசு பிறந்ததினாலே             நம் பாவமெல்லாம் பறந்து போச்சி பாடிடுவோமே   2.          புதிய வல்லமை புதிய கிருபை எனக்கு வேண்டுமே             அதை கொடுக்கும் தேவ தேவனை நான் துதிக்க வேண்டுமே             புதிய நன்மை தினமும் என்னைத் தொடர வேண்டுமே             ஜீவன் இருக்கும் வரையில் உமது வீட்டில் நிலைக்க வேண்டுமே   3.          ஆடிப் பாடுவேன் கூடி நடனமாடுவேன்             என்னை தேடி வந்த தேவனையே போற்றிப் பாடுவேன்             கைத்-தாளத்தோடும் மேளத்தோடும் கீதம் பாடு

ஆதி அந்தம் இல்லாதவர்

Image
ஆதி அந்தம் இல்லாதவர் மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                 ஆதி அந்தம் இல்லாதவர்             அன்பின் தேவனின் மைந்தன் அவர்             அன்பின் மொழியாய் மொழிந்தனரே             மன்னிப்பை வேண்டினாரே                           பிதாவே மன்னியும்                         தாங்கள் செய்வது இன்னதென்று                         அறியாமல் இருக்கின்றனர்                         எனும் மன்னிக்கும் மொழி அதுவே   1.          பாவலோகம் மீட்பதற்காய்             பாரில் வந்து அவதரித்தார்             பிதாவின் சித்தம் நிறைவேற             மன்னிப்பை வேண்டுகின்றார் - பிதாவே   2.          தேகம் வேதனை அடைந்தும்             நாவு வறண்டு போயிடினும்             நம் மீது உள்ள அன்பதனால்             மன்னிப்பை வேண்டுகின்றார் - பிதாவே                     கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்