09 June 2026

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683

Youtube Link

 

 

1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

            இயேசு விண்ணகத்தில் தோன்றிடுவார்

            ஒளிமயமான அந்த மோட்சத்தின் கரையண்டை

            மீட்கப்பட்ட தாசர் வந்து சேருவார்.

 

                        தாசர் விண்ணில் ஒன்று கூடி (3)

                        நிற்கும் போது, நானும் கூடவே நிற்பேன்.

 

2.         கிறிஸ்துவுக்குள் மரித்தோர் யாவரும் உயிர்த்தெழுந்து

            மேக மண்டலத்தைத் தாண்டிச் செல்லுவர்

            தங்களுக்காயத்தம் செய்யப்பட்ட அந்த நகர்க்கே

            மிக ஆனந்தமாய் வந்து சேருவர்.

 

3.         முழு மனதாய் நான் கிறிஸ்துவுக்கு அர்ப்பணம் செய்து

            அவர் அன்பின் செயலை அறிவிப்பேன்

            பணியை இப்பூதலத்தில் நிறைவேற்றி முடித்து

            நானும் மீட்பரண்டை வந்து சேருவேன்.            

இந்த சுவிசேடம் போலெங்கும் அகப்படாது

ஞா.கீ:147

147. இராகம்: காம்போதி                                 ஆதிதாளம் (423)

 

                             பல்லவி

 

          இந்த சுவிசேடம்போ லெங்கும் அகப்படாது

          ஏதோ என் பாக்கியம் இது.

 

                             அனுபல்லவி

 

          விந்தையுடன் புவியோரை மீட்கப் பரன் அன்பாக

            வேதியர்க்கே அளித்தார் மெய்ம்மறை சத்தியமாக,

            விளங்க விபுலகில், கலங்க வலகையும்,

            இலங்க மனுடர்கள்; துலங்க, நாளுமே, - இந்த

 

                             சரணங்கள்

 

1.         ஜாதிகள் யாவரும் சத்தியம் மறையில் சேர,

            சகல பொய்ம் மதங்களும் தரணிதனிலே மாற,

            மேதினி மீதிலெங்கும் மெய் அறிவில் தேற;

            விக்கிரகத்தை உடைக்க, உக்கிரகத்தை ஒழிக்க,

            விக்கினத்தை அறுத்து நுக்ரகத்தை அளிக்க - இந்த

 

2.         இந்நிலமீதி லெங்கும் மிதற்கீடுண்டோ பாக்கியம்?

            இச்சுவி சேஷத்தினால் எவர்க்குமுண்டாம் சலாக்கியம்;

            பன்னிரு சீடருக்கும் பகர்ந்தளித்திட வாக்கியம்

            பாரில் மனுடர் பவம் பரிகரித்திடம் யோக்கியம்;

            பட்சமுடன் திரு ரட்சகரருள் பெறும்,

            இச்சை மிகும்; குரு உச்சிதனே அருள் - இந்த

 

3.         தேசமெங்கும் பெருகி, சீர்கெட்டோர்களை மேவி,

            திடனற்றோர்களைத் தேடி, திவ்ய ஆவியால் ஊதி,

            பாசமுடன் கிறிஸ்தின் பாதம் பணிந்தே தாவி,

            பார்மிசை யாவருமே பவத்தை ஏவி,

            பரத்தின் வழியைக் காட்டும் திறத்தின் கிரீடம் சூட்டும்.

            கருத்தில் பலத்தை நாட்டம், வரத்தினருளால் தேற்றும் - இந்த

 

 

- ஜே.யா

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...