99. இராகம்: கமாசு ஆதிதாளம்
பல்லவி
இத்தனை
பாடேன் பட்டீர்?-இறையே, என்னாலே
இத்தனை பாடேன் பட்டீர்
அனுபல்லவி
சித்தம் மகிழ்ந்தே நாடி,
சத்துருப் பாவியைத் தேடி,
- இத்தனை
சரணங்கள்
1. தந்தை பிதாச் சேயனே, சருவாதி நாயனே,
பொந்தியுப் பிலாத்தின் கீழாய், நிந்தனை
துயருக் காளாய் - இத்தனை
2. முள்ளின் முடி சூடியே, மூர்க்கர் வசை பாடியே,
வள்ளலே, மகா உரத்த கள்ளனுடனே நிறுத்த -
இத்தனை
3. குருதி சிந்தி ஓடவே, கொலைக்களம் நீடவே,
பருதி இருண்டு போகக், கரங் கழல் அணி நோக,
- இத்தனை
4. எந்தை மனு வேலனே, தந்தை அனு கூலனே,
உன்தன் ஐந்து காயத்தாலே எந்தன் வினை தீர்
அன்பாலே - இத்தனை
- தைரியம் றைற்றர்.
No comments:
Post a Comment