03 June 2026

இங்கெமது நடுவில் எழுந்திடுவாய் இந்நாளில்

ஞா.கீ:309

 

 

 

 

 

 

309. இராகம்: சௌராஷ்டிரம்                           ஆதி தாளம் (470)

 

                             பல்லவி

 

          இங்கெமது நடுவில் எழுந்திடுவாய்-இந்நாளில்

            இறைவா, என்மேல் கருணை பொழிந்திடுவாய்,

 

                             சரணங்கள்

 

1.         துங்கவனே, இவர்கட் கிங் கியற்றும்-நல்ல

            சோபனம்[1] ஓங்க வென்றா சீர்வதிக்க,

            மங்கள கீதத்தால் மனம் மகிழ,-இங்கே

            வரும் அனைவோரும் உரிமை உற் றொரு மனதாக

            மருவி மறம் யாவும் மறந்திட,

            வரும் நேசமதாலே சிறந்திட, - இங்

 

2.         உற்றார் சுற்றத்தார் யாரும் உளம் களிக்க-வஞ்சம்

            உறு மருவலர்[2] தாமும் மனம் தெளிக்க

            பற்றுறு நேசர் கூடிப் பதம் படிக்க-இந்தப்

            பதி[3] மனையாளின் உறவோர் நிதியுடன் வாழ்க,

            பணிவாய் மனதோடு மதித்திட

            பரனே, உனை யாங்கள் துதித்திட - இங்

 

3.         பண்டு கானாவில் ஆன கல்யாணத்தில்-வந்து

            பட்சம் வைத்தருள் செய்த பான்மை யதாய்

            தொண்டர், எளியர் இங்கு கொண்டியற்றும்-இந்தச்

            சோபன நாளில் தேவரீர் மாவணம் மேவி,

            சுசியால் எமதுள்ளம் நெகிழ்ந்திட

            தூய்தான நல்லாவி மகிழ்ந்திட - இங்

 

- ஜாண் பால்மர்



[1] திருமணம்

[2] மருவலர்-பகைவர்

[3] கணவன்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...