நான் நடந்து வந்த பாதையிலெல்லாம்
நான் நடந்து வந்த பாதையிலெல்லாம்
என்னை சுமந்து வந்த நேசர்
இயேசுவே - 2
கடந்த கால பாவங்களெல்லாம்
கொடும் குருசில் சுமந்து தீர்த்த நேசரே
1. தாயாரின் வயிற்றினில் உருவானது முதல்
என்னை தமக்காக தெரிந்து கொண்டு பிரித்தெடுத்தீர் - 2
ஒரு தகப்பனைப்போல்
என்னை சுமந்தவரை
தினம் தழுவிடுவேன்
சிறு பிள்ளையைப்போல்
மார்போடு அணைத்தவரை பாடிடுவேன்
முழு மனதோடு சேர்ந்தவரை துதித்திடுவேன்
- நான் நடந்து
2. வழிமாறி ஓடி ஒரு
ஓடத்திலே
கொஞ்சம் இளைப்பாற நினைத்தேன் அடிதளத்தினிலே - 2
வலக்கரம் கொடுத்து என்னை எடுத்து
மீன் வயிற்றினிலும்
தனி இடம் கொடுத்து
அழியாது காத்தவரை பாடிடுவேன்
வழிவிலகாது
மீட்டவரை துதித்திடுவேன் - நான் நடந்து
3. வெகுதூரம் நடந்தே ஒரு மலையருகில்
கொஞ்சம் இளைப்பாற சாய்ந்தேன்
சூரைச்செடி நிழலில் - 2
இரு வேளையிலும் கரும் காகம் கொண்டு
சுவை கறியுடனே தினம் அப்பம் கொடுத்து
பசி தாகம் தீர்த்தவரை பாடிடுவேன்
எனக்கு இளைப்பாறுதல் எந்தவரை துதித்திடுவேன் - நான் நடந்து
https://www.youtube.com/watch?v=QnflfM19QSM
Comments
Post a Comment