பாவம் போக்கும் நதி ஜீவ தேவ நதி
பாவம்
போக்கும் நதி ஜீவ தேவ நதி
பாவங்கள்
சாபங்கள் யாவையும் நீக்கி
சுத்திகரிக்கும் நதி
1. பாவத்திற்கு மரித்து நீதிக்கு
பிழைக்கச் செய்தீர்
பாரினில் வந்தீரைய்யா
எங்கள் பாவங்கள் போக்கிடவே
2. இயேசைய்யா உம் இரத்தம்
எங்கள் பாவங்கள் போக்கிடுதே
நித்திய ஜீவன் பெற சுத்திகரிக்குதைய்யா
3. வறண்ட நிலத்திலே நீர்
ஆறுகள் உண்டாக்குவீர்
தாகமுள்ளவனுக்கு
ஜீவத் தண்ணீர் கொடுப்பீர்
4. கன்மலையிலிருந்து
தண்ணீரை வரவழைத்தீர்
கசந்த மாராவை மதுரமாய் மாற்றிடுவீர்
Comments
Post a Comment