பாவியே பாவியில் பாவியே உனில்
174. இராகம்: சேனாவதி ரூபகதாளம்
பல்லவி
பாவியே, பாவியில் பாவியே, உனில் அன்புண்டோ?
சொல்
பாவியே, பாவியில் பாவியே.
அனுபல்லவி
கூவியே, கர்த்தரு ரைக்கிறார்; கூர்ந்துகேள்,
உள்ளிந்திரியமே
பாவியே, என்கிறார் இயேசு பாவியா முனையே
பார்த்து - பாவியே
சரணங்கள்
1. பாவத்தால் கட்டுண்டிருந்தாயே - பராபரனுடை
கோபத்தால் காயமுங் கொண்டாயே;
தேவனை விட்டகன்றாய்; பாவ விருள் அடைந்தாய்;
பாவனையாக வுன்னையும் பவுசாக வைத்தவர் நானே.
- பாவியே
2. தாயுட அன்பு மாறுமோ? - தன்னருமைப் பிள்ளையைத்
தயவுடன் அழைக்க மாட்டாரோ?
தாயுமே மறந்திட்டாலும், தயவை நான் மறப்பதில்லை;
நேயமே யுனை யோர்க்காலும் நினையாதே யிருப்பதில்லை
- பாவியே
3. என்னுடைய அன்பு மாறாததே - ஆகாய உயரமும்
என்னன்பை எட்டி முடியாதே,
பின்னுங்கேள்; பாதாளத்திலும் அன்பினுக்காழம்
பெரியது;
எண்ணுமுன் சாவினுறுதிபோல் என்னுடை அன்பு
முறுதியே, - பாவியே
4. கிருபையின் கிரியை முடியவே - அதிசீக்கிரமாகவே
பெருமையாய் மகிமை காண்பையே
விருத்தவா சனத்திலேயே வீற்றுமே யிருப்பதற்கு
கர்த்தராம் என்னோடே நீ கனத்த பங்காளியாவாய்
- பாவியே
- பாளையங்கோட்டை
பாடல்.
Comments
Post a Comment