பாவி எனைச் சற்றே கண்பாரும்

பாவி எனைச் சற்றே கண்பாரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

177. இராகம்: சுருட்டி                                       ஆதிதாளம்

 

                             பல்லவி

 

          பாவி எனைச் சற்றே கண்பாரும், ஸ்வாமி

 

                             அனுபல்லவி

 

          தேவதிருப் பாலனான ஜீவனின் மன்னாவே

            சிந்தை விசாலா, மனோலா, குணாலா

            தேவசுலாவு[1] திவ்ய நேசா, ஏசு சர்வேசா - பாவி

 

                             சரணங்கள்

 

1.         இந்த லோக வாழ்வை நாடி, என்தன் மனம் வாடுதே

            தந்திரப் பசாசது நிர்பந்தம் உறச் சாடுதே!

            இடுக்கண் மிகுதுயர் படுத்துதெனையே;

            திடத்த உன துயிர் விடுத்ததிலையோ? - பாவி

 

2.         பந்தினம்[2] திரண்டு கூடி, கொந்தளித்துப் பேசுதே;

            அந்தியும் சந்தியுமாக நிந்தனை செய் தேசுதே;

            பினும் உடல் அடமோ டெனோடு சமர்[3] இடுதே;

            நினைவு தவறிடவும் மனது பதறுதே - பாவி

 

3.         பத்துரை[4] மறுத்து பேயின் எத்தினில் போனேனே;

            குத்திரத்[5] துரோகத்தினால் சத்துருவானேனே;

            பதைக்க மனமது கொதிக்கு துலகொடு

            கதிக்க அலகை[6]யும் வதைக்கு தையோ? - பாவி

 

 

- வேதநாயக சாஸ்திரியார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 



[1] ஒளி

[2] உறவினர்

[3] போர்

[4] பத்துக் கற்பனை

[5] வஞ்சகம்

[6] பேய்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே