பாவம் வந்ததையோ உலகுக்கு
365.
இராகம்: புன்னாகவராளி அடதாள
சாப்பு (493)
பல்லவி
பாவம் வந்ததையோ! உலகுக்கு பாவம் வந்ததையோ!
அனுபல்லவி
பாவத்தினால்
தேவ கோபம் வந்தது;
கோபத்தினால்
பல சாபம் வந்தது - பாவம்
சரணங்கள்
1. குலத்தையும்
கெடுத்தானே; ஆதாம் பெற்ற
பலத்தை
வீண் விடுத்தானே;
தலைப்பலன்
இழந்தானே பின்னும்பல
அலக்கணும்
உழந்தானே;
விலக்கின
கனி தின்று, மெல்லியல் சொல்கொண்டு
கலக்கம்
உற்றான் என்று கண்டிலீரோ பண்டு? - பாவம்
2. ஆபிரகாமைக்
கொண்டே-இருட்கோர்
தீபம்
தந்ததுவும் கண்டே,
கோபத்தை
மூட்டுகின்றீர்; அஞ்ஞானத்தி
லே
பக்தி காட்டுகின்றீர்;
பாவம்
செய்தீர் யேசு பரன் இன்றிப் போமோ?
கூபத்தில்
விழுந்தால் கொடி இன்றி ஆமோ? - பாவம்
Comments
Post a Comment