பாவம் போக்கும் ஜீவநதியைப்

பாவம் போக்கும் ஜீவநதியைப்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

156. இராகம்: செஞ்சுருட்டி                                 பிலந்திதாளம்

 

                             பல்லவி

 

                   பாவம் போக்கும் ஜீவ நதியைப்

                        பாரீர் வந்து பாராய்-பாவி?

 

                             அனுபல்லவி

 

                        தீவினை தீர்க்கும் தேவ மறியின்[1]

                        திருரத்த மிந்த ஆறாம்,-பாவி? - பாவம்

 

                             சரணங்கள்

 

1.         கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக்

            கண்கள்[2] ஐந்து திறந்து;-அதோ

            மல்கிச் சிலுவை யடியில் விழுந்து

            வழிந்தோடுது பாராய்,-பாவி - பாவம்

 

2.         பாவச்சுமையால் நொந்து சோர்ந்து

            பதறிவிழுந் தலறி-நிதம்

            கூவியழுத அனந்தம்[3] பேரிதில்

            குளித்தே யுளங் களித்தார்,-பாவி - பாவம்

 

3.         பத்தருளத்தி லிடைவிடாமல்

            பாய்ந்து வளமீந்து-அதை

            நித்தமும் பரிசுத்த குணத்தில்

            நிலைநாட்டுது பாராய்-பாவி - பாவம்

 

4.         ஒருதரம் இந்த நதியின் தீர்த்தம்

            உண்டோர்? ஜீவன் கண்டோர்-தாகம்

            அறுதி[4] யடைவர்; வேறொரு நதிக்

            கலையார், தேடி யலையார்,-பாவி - பாவம்

 

5.         முன்பின் ஒன்றையும் யோசியாமல்

            முழுகாயோ நீ, பாவி? இந்த

            அன்பின் நதியில் விசுவாசம் வைத்தால்

            அதுவே போதும்; பாவி-ஆ!-ஆ - பாவம்

 

6.         நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்

            நீரார்[5] நதியிதிலே-தங்கள்

            வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்

            வாழ்ந்து கீதம் பாடாய்-பாவி? - பாவம்

 

 

- அருள்திரு. ஜி.சே. வேதநாயகம்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] ஆட்டுக்குட்டி

[2] காயங்கள்

[3] ஏராளம்

[4] முடிவு

[5] நீர்நிறைந்த

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே