30 June 2025

என்னால் இயன்ற மட்டும்

என்னால் இயன்ற மட்டும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          என்னால் இயன்ற மட்டும்

            சுவிஷேசம் சொல்ல வேண்டுமே

            எந்தன் இயேசுவே இரட்சகரே

            என் ஏக்கம் நோக்கம் அதுவே - 2

 

                        சிலராகிலும் இரட்சிப்பைக் காண

                        செலவாகனும் என் காலம் நேரம் - 2

 

1.         சுவிஷேசம் அரிதான பொக்கிஷமே

            அளவிட முடியாத ஐஸ்வர்யமே - 2

            அழியாத செல்வமே

            அன்பு நிறை ஔசதமே

                        இது கிடைக்கப்பெற்ற நான் ஒரு பாக்கியவான் - 2 - சிலராகிலும்

 

2.         சிலுவையில் நான் கண்ட தூய அன்பு

            சீராக நடத்திடும் உம் கிருபை - 2

            உலகெல்லாம் அறியவே

            உம்மிலே மகிழவே

                        நான் பயன்படும் பாத்திரம் ஆகணுமே - 2 - சிலராகிலும்

 

3.         வருகையில் உம்மை நான் காணும்போது

            வெறுங்கையனாக நின்றிடாது - 2

            ஆன்மாக்கள் குவிக்கணும்

            பரலோகம் மகிழணும்

                        உம் அன்பின் கரம் என்னை

                        என்றும் அணைக்கணுமே - 2 - சிலராகிலும்

 

அஆஆ.....அஆஆ...

 

 

IMS Songs

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

26 June 2025

புதிய வானம் புதிய பூமி என்னில்

புதிய வானம் புதிய பூமி என்னில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          புதிய வானம் புதிய பூமி

          என்னில் தோன்றட்டுமே

            பழைய வானமும் பழைய வையமும்

            என்னில் மறையட்டுமே - 2

 

                        புதியனவாக்கும் புதியனவாக்கும்

                        வல்லமை வார்த்தையால் புதியனவாக்கும் - 2 - புதிய

 

1.         ஏமாற்றம் பொய்கள் வஞ்சக கபடுகள்

            என்னில் அகற்றி ஆசீர்வதியும் - 2

            இஸ்ரேயல் என்ற புது பெயர் சூட்டி

            புதிய வாழ்வினை நான் காண - (2) - புதியனவாக்கும்

 

2.         குடிவெறி களியாட்டம் சண்டைகள் பகைமைகள்

            ஊனியல்புகள் மறைந்து போக - 2

            ஆவியின் கனிகள் கொடைகள் அருளி

            புதிய பாதையை பின் தொடர - (2) - புதியனவாக்கும்

 

3.         புது ரசம் புது உடை புது உடன்படிக்கை

            புதிய படைப்பாக அனுதினம் வாழ - 2

            புது உள்ளம் புது உடல் புது ஆவி அருளி

            புதிய கிருபையில் நான் வாழ - (2) - புதியனவாக்கும்

 

 

YouTube Link

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...