நன்றியோடு அவர் வாசல் நுழைவோம்
நன்றியோடு
அவர் வாசல் நுழைவோம்
துதியோடு
பிரகாரம் வருவோம்
சமுகம்
மகிழ்ந்து கொண்டாடுவோம்
அவர்
நாமம் நல்லதென்று பாடுவோம்
1. எக்காளத்தோடும் அவரைத் துதிப்போம்
கின்னரம் தம்புரோடும் துதிப்போம்
வான் புவியிலுள்ள சிருஷ்டிகளும்
துதியின் தொனியுயர்த்தி பாடுவோம்
கர்த்தர் நல்லவர் - 2
கர்த்தர் நல்லவர் - 2
கர்த்தர் நல்லவர், அவர்
கிருபை என்றென்றும் உள்ளது
- 2
2. இயேசு தேவகுமாரன் உன்னதர்
சர்வ சிருஷ்டிக்கும் காரணர்
அவர் முன்பாக வந்து தொழுவோம்
கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம் - கர்த்தர்
Comments
Post a Comment