என்னால் இயன்ற மட்டும்

என்னால் இயன்ற மட்டும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          என்னால் இயன்ற மட்டும்

            சுவிஷேசம் சொல்ல வேண்டுமே

            எந்தன் இயேசுவே இரட்சகரே

            என் ஏக்கம் நோக்கம் அதுவே - 2

 

                        சிலராகிலும் இரட்சிப்பைக் காண

                        செலவாகனும் என் காலம் நேரம் - 2

 

1.         சுவிஷேசம் அரிதான பொக்கிஷமே

            அளவிட முடியாத ஐஸ்வர்யமே - 2

            அழியாத செல்வமே

            அன்பு நிறை ஔசதமே

                        இது கிடைக்கப்பெற்ற நான் ஒரு பாக்கியவான் - 2 - சிலராகிலும்

 

2.         சிலுவையில் நான் கண்ட தூய அன்பு

            சீராக நடத்திடும் உம் கிருபை - 2

            உலகெல்லாம் அறியவே

            உம்மிலே மகிழவே

                        நான் பயன்படும் பாத்திரம் ஆகணுமே - 2 - சிலராகிலும்

 

3.         வருகையில் உம்மை நான் காணும்போது

            வெறுங்கையனாக நின்றிடாது - 2

            ஆன்மாக்கள் குவிக்கணும்

            பரலோகம் மகிழணும்

                        உம் அன்பின் கரம் என்னை

                        என்றும் அணைக்கணுமே - 2 - சிலராகிலும்

 

அஆஆ.....அஆஆ...

 

 

IMS Songs

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே