பிரசன்னம் தாரும் தேவனே
பிரசன்னம்
தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம்
1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே - 2
கேருபீன் சேராபீன் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம் - பிரசன்னம்
2. நீரல்லால் இந்த பாரில்
தஞ்சம் வேறாருமில்லை - 2
உந்தன் சமூகத்தால் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடுமே - பிரசன்னம்
3. நல் மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே - 2
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் தந்திடுமே - பிரசன்னம்
4. தேவா உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன் - 2
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்
- பிரசன்னம்
5. வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே - 2
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகின்றோம் - பிரசன்னம்
YouTube Link
Comments
Post a Comment