புதிய கிருபை அளித்திடுமே

புதிய கிருபை அளித்திடுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   புதிய கிருபை அளித்திடுமே

                        அனுதின ஜீவியத்தில் - 2

                        கிருபை மேல் கிருபையை அருளிச் செய்து

                        கிருபையில் பூரணமாக செய்யும் - 2

 

1.         ஆத்துமாவே என் முழு உள்ளமே

            ஆண்டவரை நீ ஸ்தோத்தரிப்பாய் - 2

            தினம் அதிகாலையில் புது கிருபை

            அளித்து நீர் வழிநடத்தும் (அல்லேலூயா) - 2

 

2.         கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்த

            கிருபையின் பாத்திரமாக்கிடுமே - 2

            கிருபையினால் உள்ளம் ஸ்திரப்படவே

            கிருபைகள் ஈந்திடுமே - 2

 

3.         சோதனை வியாதி நேரங்களில்

            தாங்கிட உமது கிருபை தாரும் - 2

            கிருபையில் என்றும் பெலன் அடைந்து

            கிறிஸ்துவில் வளரச் செய்யும் (அல்லேலூயா) - 2

 

4.         சோர்ந்திடாமல் நல் சேவை செய்ய

            கிருபையின் ஆவியை ஊற்றிடுமே - 2

            நல்ல போராட்டத்தை போராட

            கிருபைகள் அளித்திடுமே (அல்லேலூயா) - 2

 

5.         பக்தியோடு நம் தேவனையே

            பயத்துடனே நிதம் தொழுதிடுவோம் - 2

            அசைவில்லா ராஜ்ஜியம் அடைந்திடவே

            கிருபையை காத்துக் கொள்வோம் (அல்லேலூயா) - 2

 

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே