பிரியமெல்லாம் தந்தேன் பிரியமெல்லாம் தந்தேன்
1. பிரியமெல்லாம் தந்தேன்
எந்தன் பிரிய இயேசுவே - 2
உம்மில் வைத்த அன்பினால்
துன்பம் சகித்தேன்
உம்மை விட்டு தூரமாக மனதில்லையே
பிரியமெல்லாம்
தந்தேன்
எந்தன் பிரிய இயேசுவே - 2
2. சொந்த வீட்டார் தூரமானார்கள்
எந்தன் இயேசுவே - 2
மூலைக்கு தலைக்கல்லாய்
மாற்றினீர் ஐயா
3. சத்துருக்கள் பின் தொடர்ந்தார்கள்
எந்தன் இயேசுவே - 2
சத்துருவின் கையில்
என்னை ஒப்புக்கொடாமல்
பாதங்களை விசாலத்தில்
நிறுத்தினீரையா
4. எந்தன் பெலன் குறைந்ததே
எந்தன் இயேசுவே - 2
பரிகாரியாக
மாறி காத்துக் கொண்டீரே
ஆச்சரியமாம்
கிருபையிலே
மகிழ்ந்து களிகூர்ந்தேன்
5. நம்பினோர் கைவிட்டார்கள்
எந்தன் இயேசுவே - 2
நானோ கர்த்தாவே
உம்மை நம்பியிருந்தேன்
உமது வெளிச்சம் என்னை
மீட்டுக் கொண்டதே
Comments
Post a Comment