புத்தியாய் நடந்து வாருங்கள்-2
269. இராகம்: துசாவந்தி ஆதி
தாளம் (450)
பல்லவி
புத்தியாய் நடந்து வாருங்கள் - திரு வசனப்
பூட்டைத் திறந்து
பாருங்கள்.
அனுபல்லவி
சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும் ஜெபம், தருமம்,
நீதி செய்து, பாடிக்கொண்டு
- புத்தி
சரணங்கள்
1. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தை துதித்துப் போற்றி,
இன்பமாய்ச்
சத்திய வேதத்தை
வாசித்து ஆராய்ந்து, நலத்தைப்-பிடித்துளத்தில்
வைத்துக்கொண்டு, இவ்வுலகத்தை
நேசியாமல் பகைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி,
நீங்கள் அடையும்படி முற்றிலும் - புத்தி
2. ஐயன் வருவார் நமைச் சேர்க்க, பூமியில் என்றும்
ஆளுகை செய்தொன்றாய்
இருக்க
வையக மனுக்கள்
திகைக்க, கிறிஸ்தோர்களின்
மகிமை மென்மேலும் கதிக்க,
துய்யன் சீயோன்
மலையில் சுதந்தராய் வீற்றிருக்க,
மெய் இது பொய் அல்ல; உங்கள் மேன்மை இதை
எண்ணித்தினம் - புத்தி
3. பரிசுத்த கூட்டம் அல்லவோ?-நீங்கள்
எல்லாரும்
பரன்மகன் தேட்டம்
அல்லவோ?
தரிசிக்க நாட்டம் அல்லவோ?-கிறிஸ்தின் உள்ளம்
தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?
பரிசனை செய்தவர்
போல, பாதத்தை மனதில் உன்னி,
கரிசனை யோடு
தேடிக், காணத் தீயோன் நாணப் படிப்
- புத்தி
4. எத்தனை என்று நான் சொல்லட்டும்-திருமறை தான்
எத்தித் தினம்
சாற்றி வரட்டும்
சத்திய தேவாவி
சொல்லட்டும்;-உங்கள் மனது
தன்னிலே நல் எண்ணம் வரட்டும்
நித்திய பிதா குமாரன் நேர் நல் ஆவி, மூவராலும்,
பத்தி, விசுவாசம், ஜீவ பாக்கியம் உண்டாக,
ஆமென்!
- மரியான்
உபதேசியார்
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment