14 January 2015
கிழக்கிலே ஒரு நட்சத்திரம் கிளம்பியதும் ஓர் அற்புதம்
அரசனைக் காணமலிருப்போமோ
அரசனைக் காணாமலிருப்போமோ?
36. மாஞ்சி ஆதிதாளம்
பல்லவி
அரசனைக் காணமலிருப்போமோ?-நமது
ஆயுளை
வீணாகக் கழிப்போமோ?-அரசனை
அனுபல்லவி
பரம்பரை
ஞானத்தைப் பழிப்போமோ?-யூதர்
பாடனு
பவங்களை ஒழிப்போமோ?-யூத - அரசனைக்
சரணங்கள்
1. யாக்கோபிலோர்
வெள்ளி உதிக்குமென்றே,-இஸ்ரேல்
ராஜ
செங்கோலெங்கும் கதிக்குமென்றே[1],
ஆக்கமிழந்து
மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன்
மொழிபொய்யாத பாக்கியமே!-யூத - அரசனைக்
2. தேசோ
மயத் தாரகை[2] தோன்றுது
பார்!-மேற்குத்
திசை
வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக்[3] காண நன்கொடைகள்
கொண்டே-அவர்
பொன்னடி
வணங்குவோம், நடவுமின்றே!-யூத - அரசனைக்
3. அலங்காரமனை
யொன்று தோணுது பார்!-அதன்
அழகு
மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர
சங்கிருக்கும் நிச்சயம் பார்!-நாம்
எடுத்த
கருமம் சித்தியாகிடும் பார்!-யூத - அரசனைக்
4. அரமனையில்
அவரைக் காணோமே!-அதை
அகன்று
தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த
உடு[4] அதோ! பார்
திரும்பினதே,-பெத்லேம்
வாசலில்
நமைக்கொண்டு சேர்க்குது பார்!-யூத - அரசனைக்
5. பொன்
தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே,-ராயர்
பொற்கழல்
அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன்
ஏரோதைப் பாராமல்,-தேவ
வாக்கினால்
திரும்பினோம் சோராமல்,-யூத - அரசனை
- அருள்திரு. ஜி.சே. வேதநாயகம்
அதிகாலையில் பாலனை தேடி
9.
அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம்
நாம் யாவரும் கூடி
அந்த
மாடடையும் குடில் நாடி
தேவ
பாலனை பணிந்திட வாரீர்
வாரீர்
வாரீர் வாரீர்
நாம்
செல்வோம்
1. அன்னை
மரியின் மடிமேலே
மன்னன்
மகவாகவே தோன்ற
விண்
தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக
நாம் செல்வோம் கேட்க - அதி
2. மந்தை
ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த
மன்னவன் முன்னிலை நின்றே
தம்
சிந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல
காட்சியை கண்டிட வாரீர் -
அதி
அல்லேலூயா அல்லே
பாடல் Text file Download அல்லேலூயா அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூய...
-
உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் மேலும் அதிக பாடல்களுக்கு உன்னதரே உம் மறைவில் தங்கி...
-
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண தாய் மறந்தாலும் நீர...
-
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம் மேலும் அதிக பாடல்களுக்கு என் வாழ்விலே நீர் ப...