29 April 2026

அப்பா அப்பா இயேசப்பா உம்மை

பாடல்

Text file Download

 

 

 

                   அப்பா அப்பா இயேசப்பா

                        உம்மை நம்பி வந்தேன் நானப்பா

                        என்னை என்றும் கைவிடமாட்டீர் - நீர்

                        என்னை விட்டு விலகிடமாட்டார்

 

1.         உம்மையே நம்பி நான் வந்திருக்கிறேன்

            உம்மிலே கனிதர நிலைத்திருக்கிறேன்

            உம்மை நம்பி வந்து விட்டதால் - நான்

            உயிரோடு பிழைத்திருக்கிறேன்.

 

2.         அன்னையும் தந்தையும் மறந்து போகலாம்

            ஆத்மநேசர் என்னையும் மறப்பதில்லையே

            உறவுகளும் பகையாகலாம் - நீர்

            ஒருவர் மடடும் எனக்குப் போதுமே

 

3.         பாவமும் சாபமும் நிக்கிவிட்டீரே

            பரிசுத்தமாய் என்னையும் மாற்றி விட்டீரே

            பாசமுள்ள நேசர் இருக்கிறீர்

            உமதன்பினாலே கவர்ந்திழுக்கிறீர்

28 April 2026

வேடரின் கண்ணிக்கு தப்பின பறவை போல்

பாடல்

 

 

Youtube Link

 

Text file Download       

 

 

 

          வேடரின் கண்ணிக்கு தப்பின பறவை போல்

            தப்பிற்று நமது ஜீவன் - 2

 

                        மகா உன்னதர் எல்லாம் வல்லவர்

                        மறைவிலே நாம் வாழ்கின்றோம் - 2

 

                        அல்லேலூயா ஆனந்தமே

                        அல்லேலூயா பேரின்பமே - 2 - வேடரின்

 

1.         அறுந்தே போனது எதிரான கண்ணி

            தப்பினோம் தகப்பன் தயவால் - 2

            இயேசுவின் இரத்தத்தால் நீதிமான் ஆனதால்

            எதிரி மேற்கொள்ள முடியவில்லை - 2 - மகா உன்னதர்

 

2.         எதிரியின் பற்களுக்கு இறையாகாமல்

            விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் - 2

            கர்த்தர் நம் சார்பில் எப்போதும் இருப்பதால்

            பெருவெள்ளம் மூழ்கடிக்க முடியவில்லை - 2 - மகா உன்னதர்

 

3.         வானமும் பூமியும் படைத்தவரான

            பரிசுத்தரே நம் சகாயர் - 2

            கர்த்தரின் நாமம் காக்கும் கோபுரம்

            நீதிமான் ஓடி சுகம் பெறுவான் - 2 - மகா உன்னதர்

 

- பெர்க்மான்ஸ்

24 April 2026

அசைக்கப்படுவதில்லையே நானும் அசைக்கப்படுவதில்லையே

பாடல்

 

 

Text file Download

 

 

                   அசைக்கப்படுவதில்லையே நானும் அசைக்கப்படுவதில்லையே

                        கர்த்தருக்குள் இருப்பதாலே நானும் அசைக்கப்படுவதில்லையே

 

1.         வியாதி வந்தாலும் துன்பம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே

            நிந்தனை பழிகள் நெருக்கம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே

 

2.         ஆவியில் நிறைந்து சத்தியத்தில் நடந்தால் அசைக்கப்படுவதில்லையே

            தேவனின் சித்தம் செய்வதால் என்றும் அசைக்கப்படுவதில்லையே

 

3.         மரணக்கண்ணிகள் எனக்கு வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே

            பரலோக ராஜ்ஜியம் இருப்பதினாலேயே அசைக்கப்படுவதில்லையே

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...