Posts

Showing posts from May, 2018

தற்பரனே எனது மேய்ப்பர் தாழ்ச்சியை நானடையேன்

170. பல்லவி                    தற்பரனே எனது மேய்ப்பர் தாழ்ச்சியை நானடையேன் அனுபல்லவி                         மெய்ப்பரன் புல் தரையில் என்னை மேய்த்துக் காப்பாரே - மகா 1.          ஊற்றின் சுத்த தண்ணீரண்டை சேர்த்திடுவாரே - என             தாத்துமத்தின் தாகமெல்லாம் அமரச் செய்வாரே 2.          தம்நாம நிமித்தமெனில் தயவுவைப்பாரே - வெகு             செம்மையுள்ள வழியிலென்கால் செல்லச்செய்வாரே 3.          மரணநிழல் பள்ளத்தில் நான் வழி நடந்தாலும் - என்னை             பரன் காப்பார் மோசத்துக்கு பயப்பட்டஞ்சேனே 4.          எனது துணையாகவிருந்தென்னைக் காப்பாரே - ஆமாம்             தமது தண்டக்கோலாலென்னைத் தாங்கியாற்றுவாரே 5.          என் தலையிலபிஷேக மிதமாய் செய்தாரே - எனின்             சந்தோஷபாத்திரம் நிரப்பி சௌக்கியம் பெற்றேனே 6.          தேவ நம்மை கிருபையென்றசெல்வ பாக்கியங்கள் - எந்தன்             ஜீவனுள்ள நாளிலெல்லாம் சேர்த்துச் செல்லுவாரே 7.          கர்த்தருட நல்வீட்டில் காதலுடனே - நான்             நித்த நித்த காலமெல்லாம் நிலைத்திருப்பேனே

எந்தா எந்நேரமிங்கு வந்தோம் முனது சேயர்

169.          (301) கண்ணிகள் 1.        எந்தா எந்நேரமிங்கு வந்தோம் முனது சேயர்             இற்றைவரைக்குமே பெற்றதயைக் களவற்ற விதத்துடன்             நற்றுதி செய்கிறோம் வந்தாசீர்வாதமருள் சந்தோஷ             வேளையிதில் வானவர்கள் கோமானே 2.          எந்தா எமதிதயம் தந்தோமுன தகமாய்             இத்தரை மீதினில் விந்தையினோடு பிறந்துருவான             பரன் சுதனே இங்கு உந்தனடியாரின் நிர்பந்தம்             அகற்றியருள், ஒரே யோவாவே 3.          இந்த சமயத்தில் வந்தே உதவிசெய்யும்             விந்தையுடன் பரமண்டலமீதிருந்துமதாவி             சொரிந்தருள் பெய்திடும் மைந்தருடைய நாவில் நின்று             நடனம் புரியும், வல்ல பரஞ்சுடரே 4.          பேதை அடியார் நித்ய ஜீவன் அடையவென்று             பாதகரோடுறவாடிடவும் பல போதனையா             லீடேறிடவும் செய்த பட்சமுடைய பரிசுத்தா             துணையருளும், பரமசுயாதிபனே. 5.          வேதம் விரித்துரைக்க நாதா கிருபை செய்யும்             ஆதரவாயருகே வரவேணும் என் ஆதித் திருச்             சுதனே பரனே என தச்சம் தவிர்த்து நிமிஷத்த

சுந்தரமேசையா உன் திரு நாமத்தை

168.  இராகம் (ஆனந்தமே சரமானந்தமே, இயேசு)                            (270)                    சுந்தரமேசையா உன் திரு நாமத்தை                         எந்த நாளும் போற்றிக்கொண்டாடுவேன்                         நின் இன்ப சன்னதி முன் நின்றாடுவேன் அனுபல்லவி             அந்தி சந்தி மத்தியானங்கள் சாமங்கள்             அல்லும் பகலும் கூடி மன்றாடுவேன் 1.          இவ்வுலகத்தினில் பங்கப்படாமல்             இருந்து தவம்செய்து அஞ்சலிப்பேன்             அந்தர மானுவேல் என் செல்வமே என             தாசீர்வாதம் பெற பஞ்சரிப்பேன் 2.          ஆவி தேகம் இரண்டு தாவி உனைத்தேடி             ஆறுதல் நாடுதே கரையனே             பாவி என்று தள்ளிக்கோபிக்காதே எனில்             பட்சம் வைத்தன்பாய் ரட்சியும் என்னை 3.          உன் திரு புண்ணியம் ஆனந்தக் காருண்யம்             உறுதி விசுவாசம் எனக்கதுவே             என் தவம் கவனம் ஜெபம் என்றென்றுமே             உன் சமுகத்திற்குள் வந்ததுவே

எருசலேமின் மாதரே கேளீர் வீதிகள் தோறும் கீதசத்தம்

167.  இராகம் (சமயமாம் இரத்தில் யான்)     (269)           எருசலேமின் மாதரே கேளீர் வீதிகள் தோறும் கீதசத்தம்             அருமணாளர் ஆத்தும நேசர் இவரே வாறார் அதோ சத்தம் 2.          எழுந்து கூடு எழில் சீயோனின் இளமணாளர் ஏசுவாறார்             மகிழ்ந்து சூழ்ந்து கொடிகள் தூக்கும் மன்னவர் ராஜ மகிபனார் 3.          இவர் என் சொந்தம் இவர் என் தங்கம் இவர் என் இன்பம் இவரெல்லாம்             இவரே பள்ளத்தாக்கின் லீலி இவர் நற்பாதம் விடி வெள்ளி 4.          சாரோனின் நல்ல ரோஜாவே ரோஜா நமது மந்தைகளைத் தொகை             சேரீரோ பார்த்து ஆயிரம் பேரில் மெத்தச் சிறந்த பர்த்தாவே நீர் 5.          மன்னர் சிங்காரம் மாதளத்தோட்டம் மலர்கள் மற்றும் தளதளங்கள்             வண்மையாய்க்கூவி வாரி இறைப்போம் வாழ்த்தி உரைப்போம் சோபனங்கள் 6.          விருந்து சாலைக்கழைத்துப் போனார், பரமணாளர் கொடி என்மேல்             பரமணளர் பாதமே அந்த சிறந்தகொடி பாருங்களேன்

மன்றாடி வேண்டினானாம் - தானியேல்

166.  செஞ்சுருட்டி                ஆதி தாளம் (268) பல்லவி                    மன்றாடி வேண்டினானாம் - தானியேல்                    மன்றாடி வேண்டினானாம் - மிக மிக                         மன்றாடி வேண்டினானாம் - பணிந்து                         மன்றாடி வேண்டினானாம் - தினம் தினம் 1.          சொந்த ஜாதிக்காக சிந்தை துயரோடு             நொந்து மனம் வாடினானாம்                  - தானியேல் மன்றாடி 2.          சாம்பலிலிருந்து சுவாமியைத் தேடி             பந்தம் கொண்டாடினானாம்                   - தானியேல் மன்றாடி 3.          உபவாசம் பண்ணி ஓர் முகமாகி             கவனல் மிகுந்தவனாம்                          - தானியேல் மன்றாடி

பரிசுத்தர் பரிசுத்தரே ஏசையா உம்மை

165.  செஞ்சுருட்டி                    ஆதி தாளம் (267) பல்லவி                    பரிசுத்தர் பரிசுத்தரே ஏசையா உம்மை                    பாடுவேன் பாடுவேன் நானே அனுபல்லவி             கடைக்கண்ணால் பாரும் என்னை             படைத்த பராபரனே - பரி 1.          திசை அறியாமல் தியங்கி ஏசையா சுவாமி             தெருக்களெல்லாம் அலைந்தேன் நான்             மனங்கசந்தழுகையில் மாளிகை காட்டினாரே 2.          பாவச்சுமைகள் சுமந்தேன் ஏசையா சுவாமி             பாரினிலே வெகு நாளாய்             பாவி நான் வந்தேன் எந்தன் பாரம் குறைத்து விடும் 3.          கட்டுகளோடே வந்தேன் நான் ஏசையா சுவாமி             திட்டி வாசல் திறவுமேன்             பட்டதுயர் நினைத்தால் எட்டினதற்புதமே 4.          விரைவுடன் வழிநடக்க ஏசையா சுவாமி             உலகிடர் படு நடுவானேன்             எதிர்த்தால் இனி விடுமோ ஏகன் கிருபை தந்தால்

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

164.  இராகம் இங்கிலீஷ்                 (266) நூற்றாண்டு கீதங்கள் 248 கீதங்களும் கீர்த்தனைகளும் 588 கன்வென்சன் 56 1.        ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா             ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்             ஜெபத்திலே தரித்திருந்து             ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர் பல்லவி                         ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்                         ஜீவியத்திற்கிதுவே சட்டம் 2.          ஊக்கத்துடனே ஓர் முகமாய்             வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு             நோக்கத்தையெல்லாம் நேர்மையாக்கி             கேட்கும்படி கிருபை செய்வீர் 3.          ஆகாத நோக்கம் சிந்தனையை             அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு             வாகானதாக்கும் மனமெல்லாம்             வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் 4.          இடை விடாமல் ஜெபம் செய்ய             இடையூறெல்லாம் நீக்கிவிடும்             சடைப்பில்லாமல் உந்தன் பாதம்             கடைசி மட்டும் காத்திருப்போம்

தேவா உன் அன்பின் சத்தத்தைக் கேட்டு மீட்பை

163.  இராகம் இங்கிலீஷ்          (265) 1.        தேவா உன் அன்பின் சத்தத்தைக் கேட்டு மீட்பை             பெற்றுக் கொண்ட நான், ஆவலாயிதோ நம்பிக்கையோடே             கிட்டிச் சேர நான் வாறேன். பல்லவி                         எனதுள்ளம் உள்ளம் உள்ளத்தை இழும்                         நீர் மாண்ட குரு சண்டை 2.          தேவாசனமுன்னேழை நான் நின்று பிரார்த்திக்கும் பேரின்பத்தை             இங்கே ருசிக்க ஆவியாலிப்போ உயிர்ப்பியும் என் உள்ளத்தை 3.          மாண்டுயிர்த்தவா மானிட நாளில் நீர் ஜெபித்த ஆவியெனில்             பாவிகட்காக ஜெபப்போராட முற்றாயாளும் உள்ளத்தில் 4.          தேவா உம் ஈவின் ஆழம் நீளமும் என்றுமெட்டாதா மல்லோ             என்றாலும் சுவாமி விஸ்வாசப்போரில் வெற்றியும் கீர்த்தியாமல்லோ 5.          சுத்த ஆவியால் என்னிதயத்தை முற்றுமறக்கழுவி             முற்றுமுடிய உம்மை சேவிக்க என்னிச்சை நீர் மாற்றும்

ஏசுவண்டை சேருவேன் ஒளியில் ஒளியில்

162.  இராகம் இங்கிலீஷ்        (235) பல்லவி 1.        ஏசுவண்டை சேருவேன் ஒளியில் ஒளியில்           ஏசுவோடே நடப்பேன் திவ்ய ஒளியில் அனுபல்லவி             நாம் தேவனோடே நடப்போம் ஒளியில் ஒளியில்             நாம் தேவனோடே நடப்போம் திவ்ய ஒளியில் 2.          சாபம் நீங்கிச் சுகிப்பேன் ஒளியில் ஒளியில்             பாவம் முற்றும் வெறுப்பேன் திவ்ய ஒளியில் 3.          மீட்பர் பேரில் சாருவேன் ஒளியில் ஒளியில்             சாட்சி சொல்லி ஜீவிப்பேன் திவ்ய ஒளியில் 4.          தூய நாதர்க்காகவே ஒளியில் ஒளியில்             தீயோன் என்னைத் தொடானே திவ்ய ஒளியில் 5.          சாவை வென்று வாழுவேன் ஒளியில் ஒளியில்             ஜீவ கிரீடம் சூடுவேன் திவ்ய ஒளியில் 6.          மோட்சம் வீட்டில் வசிப்பேன் ஒளியில் ஒளியில்             மீட்பர் அன்பைப் போற்றுவேன் திவ்ய ஒளியில்

வல்ல ஆவியே எங்கள் மீதிலே

161.  இங்கிலீஷ் மெட்டு               ஏக தாளம் (189) பல்லவி                    வல்ல ஆவியே எங்கள் மீதிலே                    வந்திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே 1.          பெந்தே கோஸ்தென்னும் நாளில் வந்த ஆவியே             எங்கள்மேலே வந்திறங்கும் சுத்த ஆவியே          - வல்ல 2.          பாந்தமுடனே பரிசுத்த ஆவியே             சார்ந்தெங்களை யுத்தத்திற்கு உயிர்ப்பியுமேன் - வல்ல 3.          சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச்செய்த             ஜெபத்தின் ஆவியை எங்கள் அகத்திலூற்றும்    - வல்ல 4.          அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமை             இன்பமும் எங்களுக்குள்ளே பெருகிடவே           - வல்ல

விடுவேனோ நான் உம்மை விடுவேனோ

160.           (188) பல்லவி                    விடுவேனோ நான் உம்மை விடுவேனோ 1.          ஆசீர்வதிப்பேனென்று ஆணையிட்டீரே துரையே             ஆசீர்வதித்த எந்தன் ஆசா நேசா பாசா உம்மை         - விடுவேனோ 2.          பாவியான எந்தனுக்காய் பாடுபட்டீரே துரையே             பங்கில்லையோ உம்மிடத்தில் பட்சமாய் என்முகம் பாராய்           - விடுவேனோ 3.          பங்குதர மாட்டேனென்றால் பட்டபாடு வீணாகுமே             பார்த்திபனே உம்மை ஒருக்காலும் விடமாட்டேனையா - விடுவேனோ 4.          என் பாவம் பொறுக்காவிட்டால் ஏன் தானையா பாடுபட்டீர்             உந்தன் பாட்டாலென்ன பயன் உண்டு அதைச் சொல்லுமையா   - விடுவேனோ

கல்லான நெஞ்சை இன்றே மாற்றுவீர் - ஐயா

159.  இராகம் (மகனே உன்னெஞ்செனக்கு) (187) பல்லவி                    கல்லான நெஞ்சை இன்றே மாற்றுவீர் - ஐயா                    கல்வாரி அன்பை என்னில் ஊற்றுவீர் 1.          கற்பாறை போன்ற எந்தன் கல் நெஞ்சே - அது             பற்பல தீமைகளைச் செய்யுதே                - கல்லான 2.          கீழ்ப்படியாத என் கல்நெஞ்சை - ஐயோ             கீழ்ப்படியப் பண்ண மாட்டீரோ                - கல்லான 3.          என்ன போதனை கேட்டும் கல் நெஞ்சில் - சுவாமி             ஒன்றும் தங்கி பலன் காணேனே              - கல்லான 4.          தினமும் திரு வசனத்தை வாசித்து - நெஞ்சில்             அனலும் அருளும் பெறவில்லையே        - கல்லான

ஏசுநேசா வாரும்

158.  இராகம் (ஆசீர்வாதம் வேணும்)                                                       (186) பல்லவி                    ஏசுநேசா வாரும்                    பாசமாகத் தேடி வந்த 1.          ஐந்தப்பம் இருமீன்கள் கொண்ட ஐயாயிரம் பேர்களுக்கு ஏசுநேசா             பந்தி போஜனமளித்த                                         - ஏசுநேசா 2.          பொன்னான மேனியுள்ள ரட்சகரின் பிள்ளைகளை             துன்பமில்லாமலே காத்த                                    - ஏசுநேசா 3.          பல பல விதமாய் நாங்கள் செய்துவந்த பாவங்களை             சிலுவைதனில் சுமந்து தீர்த்த                           - ஏசுநேசா 4.          பதினொருவர் கூடி நிற்க ஒலிவ என்னும் மலைஉச்சியில்             மேகரதம் ஏறிச்சென்ற                                        - ஏசுநேசா 5.          அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தருக்கு             அல்லேலூயா ஆமென் ஆமென்                          - ஏசுநேசா

ஆசீர்வாதம் வேணும் ஆவியான ஜீவ தேவ

157.  செஞ்சுருட்டி     ஆதி தாளம் (185) இராகம் (ஏசுநேசா வாரும்) பல்லவி           ஆசீர்வாதம் வேணும் ஆவியான ஜீவ தேவ           1.          தேசிக மேலோகமதில் தேவதிருப்பாதமதில்             செல்ல வல்ல வெல்ல நல்ல                     - ஆசீர்வாதம் 2.          கண்மணிபோலன்புடனே காண்பி தயை நண்புடனே             காவா மூவா தேவா வாவா                      - ஆசீர்வாதம் 3.          அத்தனுனின் பாடுகளை அன்புடனே சிந்தை செய்ய             ஆசையுள்ள ஆவல்கொள்ள                  - ஆசீர்வாதம் 4.          பன்னிரண்டு சீஷருக்கும் பரிசுத்தாவி கொடுத்த தேவா             பத்தா கர்த்தா நித்தா வாவா                 - ஆசீர்வாதம் 5.          ஆலயந்தனிலுமது வசனமதைப் போதிக்கின்ற             போதகர் அனைவருக்கும்                      - ஆசீர்வாதம் 6.          பத்தமுடன் கூடி சுவிசேடமலர் சூடிக்கவி             பாட ஆட தேட நாட                             - ஆசீர்வாதம் 7.          பூரண விசுவாச ஜெபம் பூததயை தியான தவம்             புரிய அரிய வரிய பெரிய                         - ஆசீர்வாதம்

வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே

156.  காப்பி    ஆதி தாளம் (184)   1.        வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே             இந்நேரமே கண்பாருமே 2.          தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும்             உம் ஜோதியின் ஒளி வீச 3.          சத்துருக்கள் சதிசெய்ய நித்தம் என்னை நெருக்கிறார்             அத்தன் நீர் தான் அடைக்கலம் 4.          இப்பாரிலே நின் பேரையும் தப்பாமலே யான் பாடியே             எப்போதுமே கொண்டாடுவேன் 5.          என்மேசையா உன் ஆசையைக்கொண்டோசையாய் நான்பேசவே             நின்னாசி தா நன் நேசமாய் 6.          நாதனுன்னை என்நேரமும் ஓதும் ஏழைப்பாவியேனை             ஆதரித்தே ஆண்டருள்வாய்    - வந்தாளுமே

அருளின் மாமழை பெய்யும் என்று வாக்களித்தோரே

155.  இராகம் (அருள் ஏராளமாய் பெய்யும்)     (180)   1.        அருளின் மாமழை பெய்யும் என்று வாக்களித்தோரே             மாரியாய் பெய்திடச் செய்யும் லோகத்தின் ரட்சகரே பல்லவி             தேவன்பின் வெள்ளம் தேவன்பின் வெள்ளம் தேவை             கொஞ்சம் ருசித்த என் உள்ளம் கெஞ்சுதே இன்னும் தேவை 2.          கற்பாறைபோல் பாவி உள்ளம் கடினப்பட்டதையோ             பரிசுத்தாவியின் வெள்ளம் கரைக்க வல்லதையோ         3.          வெட்டாந்தரை நிலம் தானும் ஏதேன்போல் மாறுமென்றீர்             சாபத்துள்ளான முற்பூண்டும் கேதுருவாகுமென்றீர் 4.          தேசத்தின் இருளைப்பாரும் லோகத்தின் மெய்த்தீபமே             ஆவியின் அருளைத்தாரும் மனமாற்ற வல்லவரே 5.          சபையின் குறைகள் யாவும் தீர்த்திடும் வல்லவரே             யுத்தத்தில் முன்செல்ல ஏவும் எங்கள் தளகர்த்தரே         

ஆயத்த ஜெபம் செய்ய பெலன் தாரும் சுவாமி

154.  இராகம் (இம்மணர்க்குன்னருள்)         (179) 1.        ஆயத்த ஜெபம் செய்ய பெலன் தாரும் சுவாமி           அடைக்கலமாயுந்தன் துணை வேணும் நேமி 2.          காயத்தால் குணக்கேடு தடைகள் வராமல்             காப்பாற்றக் கேட்கிறேன் கிறிஸ்துவே தேவா 3.          சுருக்க நாளானதால் கொதிக்கிறான் சீறி             சுடரொளிப் பட்டயத்தூதரால் காரும் 4.          ஏழு முறை ஜெபத்துக்கு தடைகள் வராமல்             இரக்கமாய் தயவுடன் நடத்துமேன் சிவாமி 5.          கருத்தான மனதுடன் ஒருமித்துப்பாடி             களிப்புடன் மன்றாட அருள் செய்யும் தேவா 6.          வருகையின் நாள் மிக நெருங்குதே சுவாமி             மருரூப ஆவிக்காய் தவிக்கிறேன் பாவி 7.          கிருபையின் கரத்தினால் தாங்குமேன் சுவாமி             மருரூப ஆவியை அளியுமேன் சுவாமி 8.          இம்மானுவேலர்க்கு எதிர் கொண்டு போக             எண்ணையும் தீபமும் தாருமேன் சுவாமி 9.          கேட்கிற வரமெல்லாம் கிருபையாய் தாரும்             கேடான மனமொன்றாய் பொருந்திட வாரும் 10.        மறுபடி பிறந்த தற்பெருமையைக் களைந்

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக் கூடாதே

153.  செஞ்சுருட்டி               ஆதி தாளம்             என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக் கூடாதே             மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே 1.          கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய் மகிழ் கொண்டாடுவோம்;             நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம். 2.          பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே             தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே 3.          அட்சயன் பட்சமாய் ரட்சிப்பை எங்களுக்கருளின தாலே             நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகர வேண்டியதே 4.          வெண்ணங்கி பொன் முடி வாத்தியம் மேல் வீடு ஜெயக்கொடியுடனே             மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனைத் தோத்தரிப்போம்