பரிசுத்தர் பரிசுத்தரே ஏசையா உம்மை


165.  செஞ்சுருட்டி                    ஆதி தாளம் (267)

பல்லவி

                   பரிசுத்தர் பரிசுத்தரே ஏசையா உம்மை
                   பாடுவேன் பாடுவேன் நானே

அனுபல்லவி

            கடைக்கண்ணால் பாரும் என்னை
            படைத்த பராபரனே - பரி

1.         திசை அறியாமல் தியங்கி ஏசையா சுவாமி
            தெருக்களெல்லாம் அலைந்தேன் நான்
            மனங்கசந்தழுகையில் மாளிகை காட்டினாரே

2.         பாவச்சுமைகள் சுமந்தேன் ஏசையா சுவாமி
            பாரினிலே வெகு நாளாய்
            பாவி நான் வந்தேன் எந்தன் பாரம் குறைத்து விடும்

3.         கட்டுகளோடே வந்தேன் நான் ஏசையா சுவாமி
            திட்டி வாசல் திறவுமேன்
            பட்டதுயர் நினைத்தால் எட்டினதற்புதமே

4.         விரைவுடன் வழிநடக்க ஏசையா சுவாமி
            உலகிடர் படு நடுவானேன்
            எதிர்த்தால் இனி விடுமோ ஏகன் கிருபை தந்தால்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு