தேவ சேயின் பால்யசேனையர் நாமே


139.  இராகம் (இங்கிலீஷ்)              (119)

பல்லவி

                   தேவ சேயின் பால்யசேனையர் நாமே
                   தேவ வேலை சற்று செய்வோம் வாருமே

அனுபல்லவி

                        தேசமெங்கும் போகச்சற்று சிறுவராயினும் பின்னும்
                        செய்ய சிறு வேலையுண்டு செய்தாலதில் ஜெயமுண்டு

1.         பாரில் வந்தெமக்காய் பாடுபட்டோனை
            பாவிக்காய் மரித்த பரிசுத்தனை
            பாசத்தோடென்றும் நினைத்து பணிவாகவே துதித்து
            பட்சமிக பொக்கிஷமாக பாலர் நம் நெஞ்சில் பதித்து    - தேவ

2.         ஏசு பாலன் செய்கைக்கேற்க நடப்போம்
            என்றும் தேவ தயவிருக்கப் பார்ப்போம்
            எங்கள் சிற்றொளி இருண்ட இருதயங்களில் வீச
            ஏசு ஞானோதய வொளி என்றென்றும் மிலங்கிடுவோம்    - தேவ

3.         பாலர்க்கேற்க ஏசுபாதம் பணிவோம்
            பண்போடுட்கருத்தாய் பாடிப் புகழ்வோம்
            பாலர் நேசர் ஏசு நம்மேல் பட்சமுள்ளோரென்றந்து
            பள்ளித்தோழர்க ணண்பரைப்பற்றி என்று நாம் சொல்லுவோம்     - தேவ

4.         நல்ல போர்வீரராய் நாடோறும் நின்று
            நாதன் கட்டளையை நன்கு மதித்து
            நானா திசை வீசச் சத்துரு நடுங்கி மிரண்டு ஓட
            ஞானாயுதம் கையிலேந்தி நன்றாயுபயோகிப்போமே        - தேவ

5.         மீட்பரோடு மோட்சவீடு நமதே
            வெண்ணுடை நமதே வேதம் நமதே
            வெற்றியால் சிறந்தமுடி வேந்தரா யாசாரியராய்
            மேன்மை பெற்று ஏசு மடிமீதில் விளையாடுவோமே         - தேவ

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு