எழும்பு சீயோனே! இயேசு இதோ வருகிறார்
104.
பல்லவி
எழும்பு
சீயோனே! இயேசு இதோ வருகிறார்
1. இயேசுவின் வருகை மிக சமீபமாகுதே - இனி
மோசந்தான் அசதியாக ஜீவித்துவந்தால் - பின்பு
அலறிடுவாயே இயேசு கைவிடும்போது - வேகம்
2. பூலோக நேசம் உன்னில் சற்றும் வேண்டாமே
மேலோகம் பார்த்துப் பார்த்து லோகத்தை வெறு
- இது
மாயலோகமே உன்னை மோசம் போக்குமே - வேகம்
3. பாவங்கள் இருதயத்தில் ஏதேனுண்டோ - சிறு
பாரங்கள் உன்னைக்கீழே தள்ளிவிடுமோ - உந்தன்
இருதயத்தை நீ பரிசுத்தமாக்காயோ? - வேகம்
4. லௌகீக கவலையோடு பெருந்தீனியும் - வெறு
மாமிச சுபாவத்தோடு நான் என்பதுமே - உனை
மோசம் போக்குமே உந்தன் ஆசை அழியுமே! - வேகம்
5. மேகத்தில் இயேசுராஜன் வேகம் வரவே - பரம்
ஏறுவார் பரிசுத்தர் வேறு ரூபமாய் - அன்று
மேகமேறிட நீயும் ஆயத்தந்தானா - வேகம்
6. ஆகாயத்தில் நடக்கும் கல்யாணத்திலே - சுத்தர்
பாடுவார் அல்லேலூயா செட்டை அடித்து - அப்போ
அங்கிருப்பாயோ பூவில் ஓடி ஒளிப்பாயோ? - வேகம்
7. அந்திக் கிறிஸ்து அரசாட்சி செய்யும் வேளையில்
- கோப
அக்கினி பூமியில் சொரியும் வேளையில் -
நீயும்
அகப்படாமலே இன்று தப்பிக்கொள்வாயோ - வேகம்
Tq for this lyrics
ReplyDeleteமிக்க நன்றி!
DeleteAmen. இயேசுவே உம் வருகைக்காய் காத்திருக்கிறோம் அப்பா
ReplyDelete