சாலேம் குமாரத்தியே உன் நாயகர் தாமதம் செய்வாரோ


106. இராகம் (எத்தனையோ சாட்சி)              (90)

பல்லவி

          சாலேம் குமாரத்தியே உன் நாயகர் தாமதம் செய்வாரோ

1.         கோலமிகும் ஏசுராஜன் கொற்றவா குலத்துவாசன்
            ஞாலமெங்கும் புகழ்நேசன் நடுத்தீர்வை தருமீசன்         - சாலேம்

2.         கன்னியெ சீயோன் குமாரி காலமடத்துதே நாரி
            உன்னையே அவர்க்குப்பாரி ஒக்குமொன்றவனைவர் வாரி         - சாலேம்

3.         சிக்கிரம் வந்துனைக்கூட்டி செல்வமென்றன்பு பாராட்டி
            வாக்குரைத்தபடி கிட்டி வருவதுண்மையே சீமாட்டி                 - சாலேம்

4.         சாட்சிகள் பழியை வாங்கி தாருமெங்கட்கு வெண்ணங்கி
            மாட்சிசேரக்ஷாயிரங்கி வாருமென்கிறோரே சிங்கி                     - சாலேம்

5.         விற்பனர் கவி விண்ணேற வேலர் துரை களி கூர
            சற்குணன் சங்கீதம் கூற சபையே உன் மனம் தேற                     - சாலேம்


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு