சங்கீதங்கள் பாடிக்கொண்டு ஜல்தியாய் வாரும்


90. இராகம் 
(நாம் நற்சுகமாய் பெத்லேம் நகர்)          (75)

பல்லவி

          சங்கீதங்கள் பாடிக்கொண்டு ஜல்தியாய் வாரும்

அனுபல்லவி
                   சுவாமி ஏசு இன்றுயிர்த்தார்

1.         ஏதோ சத்தம் கேட்குதே ஏசு உயிர்த்தெழுந்தாரே - மா
            இங்கித காலையிலவர் சங்கை சமுகம்
            போவோம் வசரும் விரைவாகவே                       - சங்கீதங்கள்

2.         வேதாளம் கலங்கிடவே பாதாளங்குலுங்க - மா
            வேந்தன் துரைராஜனிதோ வெற்றி சிறந்தார்
            போவோம் வாரும் விரைவாகவே                       - சங்கீதங்கள்

3.         கல்லறை திறந்திடவே கர்த்தர் எழுந்தார் - கண்
            கண்டுகளித்த மங்கையா அண்டை நிற்கிறார்
            பார்ப்போம் வாரும் விரைவாகவே                      - சங்கீதங்கள்

4.         பேதுருவும் யோவானும் பிரியமாய் போறார் - அவர்
            பிறகாலே ஒடிக்கல்லறையைப் பார்த்து வருவோம்
            வாரும் போவோம் விரைவாகவே                       - சங்கீதங்கள்

5.         தூதர் பறந்திடவே துதிமுழங்க - மா
            ஆதரவு சொல்லும் நேசர் அண்டையிற்போவோம்
            இதோ வாரும் போவோம் ஜல்தி                        - சங்கீதங்கள்

6.         பார்த்தவர் பயந்திடவே கேட்போர் கலங்க - மா
            பார்த்திபனார் ஏசுராஜன் நேத்திரனுயிர்த்தார்
            இதோ வாரும் போவோம் ஜல்தி                        - சங்கீதங்கள்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு