நாசலோக மீதிலே வாசஞ்செய் புறாவண்ணமே
123. செஞ்சுருட்டி ஏக தாளம்
(104)
நாசலோக
மீதிலே வாசஞ்செய் புறாவண்ணமே
ஏசுநேசர் உன்னைத் தேடுகிறார்
- அதி ரூபியே
என்னோடே எழுந்துவா ஓடி நடந்துவாவே
1. வாசலிலே நிற்கிறார் பாசமாயழைக்கிறார்
நாசமில்லா லோகமதற்கு - அதி ரூபியே
2. பரமண்டலம் சேரலாம் சுரமண்டலம் பாடலாம்
தரைமண்டலத்துள்ள நேசரே - அதி ரூபியே
3. தங்கரூபமாகலாம் அவர் தங்கள் ரூபமாகலாம்
மங்களங்கள் பாடலாமே - அதி ரூபியே
4. வெண் துயிலுடுப்போம் வெண்கொடி பிடிப்போம்
கண்திறந்து பார்க்கமாட்டாயோ - அதி ரூபியே
5. மேகமீதிலோடுவோம் சங்கீதமாகப் பாடுவோம்
தாகமல்லையோ அதின்மேலே - அதி ரூபியே
6. ஜீவகிரீடம் தரிப்போம் நித்ய ஜீவனோடே யிருப்போம்
ஜீவவாக்கு உரைக்கவில்லையோ - அதி ரூபியே
7. ஞானமணவாளனின் கலியாண விருந்துண்ணலாம்
வானவரின் கூட்டம் கூடலாம் - அதி ரூபியே
8. ஜீவமன்னா புசிப்போம் ஜீவதண்ணீர் குடிப்போம்
சாபமெல்லாம் தொலைக்கப் போறாரே - அதி ரூபியே
9. தங்கரத்தினக் கோட்டைகள் சிங்காரமான ஆலயம்
மங்காமல் துலங்குது பார் - அதி ரூபியே
Comments
Post a Comment