நடப்போம் வாருங்கள் சீயோன் மலைக்கு


122. சங்கராபரணம்          ஆதி தாளம்  (103)

பல்லவி

                   நடப்போம் வாருங்கள் சீயோன் மலைக்கு
                   நாமனைவரும் போய்வருவோம்

அனுபல்லவி

            சிங்காசனங்களை சுற்றிப்பார்த்து
            சந்தோஷங் கொண்டாடியே களிகூர

1.         தேவாதி தேவன் தூதர்கள் சூழ சிறந்த மகிமையில் வீற்றிருக்க
            லோகதி மீட்பர் லோகத்துக் கொளியாய் வலது பாரிசத்தில் கொலுவிருக்க
            நாலாறு மூப்பர் ராஜாவைச் சுற்றி ஆசனங்களில் வீற்றிருக்க
            தூதர் சேனைகள் ஓயாத்தொனியாய் தேவனைத் துதிக்கும் அவ்விடத்துக்கே - நடப்போம்

2.         வீதிகளெல்லாம் பொன்மயமாக வைர ரத்தினங்கள் பதித்து
            நீதியின் சூரியன் நிறைந்த ஒளியாய் அவைகளின் மேலே இலங்கையிலே
            ஜோதியின் மயமாய் சம்மனசோர்கள் சூழ்ந்துலாவும் சமயத்திலே
            பாவிகட்காக தேவாட்டுக்குட்டி பரிந்து பேசுவதை நாம் பார்க்க             - நடப்போம்

3.         தற்பரதேவன் வெற்புச்சீனாயில் கற்பனை பத்தும் தந்திருக்க
            அற்பமாயெண்ணி நிர்ப்பாக்கியராகி சற்பனை செய்த தருணத்திலே
            விற்பன கிறிஸ்து அற்புதமாய்மரி யாளுதிரத்தினில் உற்பவித்து
            ஆடுகட்காகப் பாடுகள் பட்டு வீடு போய்ச் சேர்ந்து நாடுவதாலே - நடப்போம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு