சுபஜெயமங்களமே நித்ய சுபஜெயமங்களமே
88. சங்கராபரணம் சாப்பு தாளம் (73)
பல்லவி
சுபஜெயமங்களமே
நித்ய சுபஜெயமங்களமே
சுகமேதரவே
புவிமீதுயிர்த்த சுதனேசு நாதருக்கே
1. தீர்க்கருரைத்தனரே இன்று ஏசு உயிர்த்தனரே
ஜெகதீஸ்பரனார் சுதனார் கிறிஸ்து ஜெயமாய்
எழுந்தவர்க்கே
2. தூதர் சங்கமுழங்க வான ஜோதிகளுமிலங்க
துரிதாய் பரனார் களிகூர்ந்திடவே தொனியாய்
எழுந்தவர்க்கே
3. அங்கங்குளித்திடவே உலகெங்கும் மகிழ்ந்திடவே
அடியாருட சாவின் கூரொடித்து ஆறுதல் தந்தவர்க்கே
4. சாத்தான் நடுங்கிடவே அவன் சக்தி ஒடுங்கிடவே
தலையே படுகாயமதாய் ரத்தம் சாட மிதித்தவர்க்கே
5. கல்லறை காத்திருந்த காவல்காரர்களும் வருந்த
கருணைபரதூதனுமே திறக்கக் கனமாயெழுந்தவர்க்கே
6. நித்திரையே அடைந்து வாழ்ந்த சுத்தர் உயிரடைந்து
நேராக சாலேமேகிடச் செய் நித்தியானந்தருக்கே
7. மகதலனாள் மரியும் கூடவந்த மற்றோர் மரியும்
வழியேகிடும் வேளையில் வாழ்கவென வார்த்தை
பகர்ந்தவர்க்கே
8. பயமெனக்கென்பயமே ஏசுபரனைத் துதி மனமே
பரமேகிடவே விசுவாசிகட்கு பாதை காட்டுவர்க்கே
Comments
Post a Comment