குணப்பட இதுவே தருணமையா


136.                 தமிழ் இராகம் (116)

பல்லவி

                   குணப்பட இதுவே தருணமையா
                   கோபாக்கினை நாள் கொடிதாமே

1.         க்ஷணத்தில் இவ்வுலகமும் அதிலுள்ள பொருள்களும் குணப்பட
            தசிக்கப்படுமே படுமே படுமே                 - குணப்பட

2.         இன்றைக்கிருக்குமுயிர் நாளைக்கிருக்குமோ யென்
            றெண்ணியே மனங்கசந்து                      - குணப்பட

3.         ஆஸ்தி கல்வி உத்தியோகம் அதிகரித்தாலகந்தை
            ஆகி அழிம்பு செய்யாதே                       - குணப்பட

4.         ஆவியுன் கூடுவிட்டேகுமுன் தேவனை
            அறிந்த வணங்கு மனமே                      - குணப்பட

5.         கனிகொடா மரங்களை விழுத்தும் கோடரி ஐயன்
            கரத்திலிருக்குதையையோ ஐயையோ   - குணப்பட

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு