18 May 2018

சாமி இவர்க்கிதை மன்னியும் சாமி


62.   (இராகம்: வாரா வினை வந்தாலும்) (53)

பல்லவி

          சாமி இவர்க்கிதை மன்னியும் சாமி

1.       சாமி எனவறியாமற் செய்தார்கள்
            சற்றுமிரக்க மற்றேறிருந்தார்கள்
           
2.         தாங்கள் செய்வதின்ன தென்றறியார்கள்
            தற்பரனும்மை இங்காரறிவார்கள்

3.         முள் முடி சூட்டி எனைப் பழித்தார்கள்
            மூங்கிலெடத்ததன் மெலடித்தார்கள்

4.         நீசச் சண்டாளரென கண் கட்டினார்கள்
            நீ சொல்லிப் போடெனவே சூட்டினார்கள்

5.         கன்னத்தடித்து கதிக்க வைத்தார்கள்
            மன்னனே என்று பகடி செய்தார்கள்

6.         எந்தன் முகத்தினிலே துப்பினார்கள்
            எத்தனை எத்தனையோ செப்பினார்கள்

7.         பொய்யான சாட்சிகளைக் கூட்டினார்கள்
            போதனை செய்து குற்றஞ் சாட்டினார்கள்

8.         வாரதினாலெனையே அடித்தார்கள்
            வாதை அநேகஞ் செய்தே முடித்தார்கள்

9.         பாதகஞ் செய்தவனை விடுத்தார்கள்
            பாழ்மரத்தை எனின் மேலே கொண்டார்கள்

10.       கால்கரத்தாணி கடாவி வைத்தார்கள்
            கள்ளர் நடுவில் மரிக்க வைத்தார்கள்

11.       வஸ்திரமெல்லா முரிந்து கொண்டார்கள்
            கஸ்திப்படுத்தி வதைத்துக் கொன்றார்கள்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...