19 May 2018

மரத்தின் மீதே கிறிஸ்து மரித்த பின்னே சேவகர்


81. இராகம் 
(கழுத்தில் விழுந்த மாலை)    
ஆதி தாளம் (66)

1.       மரத்தின் மீதே கிறிஸ்து மரித்த பின்னே சேவகர்
            மார்பில் வாளிடரத்தம் நீர் வரவே
            மரித்தவ ரென்றுடம்பை மரத்தின் கீழிறக்கினார்
            முழங்கால் கரங்களை முறித்தனரோ

2.         அரிமத்தியா ஊரானெனும் அலங்காரனாம் யோசேப்பு
            அருகில் பிலாத்து துரையிடம் வேண்டி
            அமலனேசுவின் தேகமடைந்த கந்தபோளங்கள்
            அங்கமுழுதுமிட்டே அகமகிழ்ந்து

3.         மெல்லிய தும்பட்டி ஒன்றால் மேனிமுழுது மறைத்து
            மேடைக கல்லறைக்குள்ளே இறக்கிவைத்து
            மங்கையருங்கூடி அங்கே மனம் பதறிப் புலம்ப
            மேற்புறம் பெரிய கல்லைப்புரட்டி வைத்தான்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...