எந்தன் நிர்பந்தம் பாரும் என் மக்களே


148.  இராகம் (பாவம் போக்கும் ஜீவநதியை) (212)
செஞ்சுருட்டி                                                           பிலந்தி தாளம்

பல்லவி

          எந்தன் நிர்பந்தம் பாரும் என் மக்களே!
          இரங்க மனமில்லையோ?

அனுபல்லவி

          இந்துமா சமுத்திரம் தொடங்கி
            இமயமலை வரைக்கும் ஐயோ!

1.         உந்தன் சோதரர் எண்ணிறந்த பேர்
            உருக்குலைந்தனர் பாரீர் - என்றன்
            சொந்தப் பிள்ளைகள் சோர மார்க்கத்தில்
            தொலைந்து கெட்டுப் போனாரே - ஐயோ!          - எந்தன்

2.         பஞ்சம் பசியுற்றோரைப் பார்க்கப்
            பதறுதே என் உள்ளம்! - யாரும்
            அஞ்சும் பாழ் கொள்ளை நோயின் வாளினால்
            அறுப்புண்டவர் எத்தனை? - ஐயோ!                 - எந்தன்

3.         ஜாதி என்னும் பேயும் நுழைந்து
            சகலரையும் கலைத்தான் - அவன்
            வாதினால் பல ஜாதிகள் எழ
            வம்புகள் மிக வந்ததே! - ஐயோ!                       - எந்தன்

4.         அருமையாகப் பெற்ற என் பெண்மக்கள்
            அந்தகாரச் சிறையில் - சிக்கிச்
            சிறுமையடைந்து தவித்து நிற்பதைச்
            சிந்தையில் வைப்பார் இல்லையோ? - ஐயோ!  - எந்தன்

5.         ஏசு என்னும் உலக ரட்சகர்
            எனக்காகவும் மரித்தார் - பல
            தேசம் அவரைப் பெற்றிருக்க அந்த
            நேசா எனக்குமில்லையோ? - ஐயோ!                 - எந்தன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு