எங்கே ஓடிப்போ யொளிப்பாய் ஏதுமற்ற பேதையே நீ
110. (92)
பல்லவி
எங்கே ஓடிப்போ
யொளிப்பாய் ஏதுமற்ற பேதையே நீ
அனுபல்லவி
சிந்தித்துப் பார் மெய்யான வாக்கை ஜீவமானிடர்
எல்லாரும் சேர்வார்
ஜீவியநரர் எல்லாரும் வருவார் ஏது செய்வாய்
எவ்விடம் போவாய்
லோகமனுவேல் லோகத்தின் பிரபுவே
1. ஆதாமுதலிவரை அனைவரும் மெய்யாகவே வருவார்து
வேதவார்த்தை பொய்யாகுமோ கேள் வெந்தழிந்தோர்
யாவரும் வருவார்
வெள்ளத்திலழிந்தவர் யாவரும் வருவார்
ஜீவியர் வருவார் வாசினர் வருவார் - ஏது
செய்வாய்
2. சிங்கம் போல ஜெயம் கூறிக்கொண்டு தேகரை நியாயம்
தீர்க்க வருவார்
தேவதூதர் சேனையோடு வருவார் மேகவாகனம் ஏறியே
வருவார்
தேகமானிடர் காணவே வருவார்
பாவிகள் புலம்பி பாதகர் துடிப்பார் - ஏது
செய்வாய்
3. சிங்காசனமீதிலிருப்பார் தேவதூதர் ஆர்ப்பரிப்பார்
பூமியிலுள்ளோர் இருபோகமாவார் நன்மை செய்தவர்
ஓர் திரளாவார்
தீமை செய்தவர் ஓர் திரளாவார்
ஜாதி மேன்மை யாவும் ஒளியும் - ஏது செய்வாய்
4. உன்னுடைய பாவமெல்லாம் கண்ணின் முன்னே நிற்கக்
காண்பாய்
உன்னதரின் முன்னே நடுங்கி எண்ணி எண்ணிப்
பார்த்து அலறி
ஏசுதேவன் சொல்லைக்கேட்டுத் துடிப்பார்
கூவி அலறிக் கூக்குரலிடுவார் - ஏது செய்வாய்
5. தேவனுட புத்தகங்கள் ஆனதின்படியே தீர்ப்பார்
ஜீவபுஸ்தகம் தன்னிலே ஜீவவாசிகள் பேர்கள்
துலங்கும்
பாவிகள் பேரதில் காண்பதே இல்லை
தேவகோபத்தீயில் விழுவார் - ஏது செய்வாய்
Comments
Post a Comment