19 May 2018

உருகாயோ நெஞ்சமே நீ குருசினிலந்தோ பார்


72. இராகம் (இங்கிலீஷ்)                    (260)

பல்லவி

                    உருகாயோ நெஞ்சமே நீ குருசினிலந்தோ பார்
                        கரங்கால்களாணி யேறித்திருமேனி நையுதே

1.         திண்டுபோல எண்டிசையின் தொண்டர் பாவம் ஆண்டான் மேலே
            நின்றதே ஒ பண்டு ஏவை தின்ற சாபம் மண்டுதே

2.         தாகம் மீறி நாவறண்டு தங்கமேனி மங்குதே
            ஏகபரன் கண்ணயர்ந்து, எத்தனையாய் ஏங்குறார்

3.         நித்தியகாலம் பாத்திரராய் நீசர் வாசஸ்தலம் உய்ய
            சத்தியவாசன் சித்தமேவும் சங்கைராஜன் இங்கு பார்

4.         மன்னுயிர்க்காய் தன்னுயிரை மாய்க்க வந்த மன்னவனார்
            இந்நில மெல்லாம் புரக்க, ஈனக்குருசேறினார்

5.         மூவுலகைத் தாங்கும் தேவன் மூன்று ஆணி தாங்கிட
            சாவுவேளை வந்திப்போது சிலுவையில் தொங்குறார்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...