16 May 2018

நாதப்பராபரன் தேவ மனோகரன் நரரூபமாகினார்


46.         இராகம் (ஜெகஜோதிப் பராபரனே)                                           (303)

பல்லவி

                   நாதப்பராபரன் தேவ மனோகரன் நரரூபமாகினார்

அனுபல்லவி

            ஆதம் ஏவை செய்த பாதகம் போக்கிட அன்னையிட மேவினார்

1.         விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் தொட்ட விந்தை மகானந்தமே
            பண்ணிசை பாடியே என்னேசு ரட்சகர் பாதம் பணிந்திடவே

2.         தூயர்கள் போற்றவும் ஆயர்கள் ஏற்றவும் தோன்றின அச்சயனே
            நாயனே நல்ல சகாயனே முற்பவ நாசனாம் ரட்சகனே

3.         கைத்தாளம் சீரடி மத்தளம் பேரோலி கண் கண் கணீரெனவே
            அத்தனே உன்னருள் சித்தமே வைத்தருள் ஆனந்தம் பாடிடவே

4.         பெத்தலேகம் பதி சத்திரத்தில் கனி பெண்மடிமீதிடமே
            சித்தம் உவந்து நீர் நித்திரை செய்கிற செய்தி நல் அற்புதமே

5.         பக்தர்களும் பரிசுத்தர்களும் புகழ் பட்ச தயாபரனே
            சித்தமுடன் வானமுத்தர்களும் மகிழ் செப்பும் நல் அற்புதமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...