ஆகா பூலோக வாழ்வே அநித்தியம்
134. செஞ்சுருட்டி ஆதி தாளம் (114)
பல்லவி
ஆகா
பூலோக வாழ்வே அநித்தியம்
அனுபல்லவி
சாகா
வரங்கொண்டு யார்தான் புவிவந்தார் - ஆகா
1. கதைபோல் வருஷங்கள் கழியுதெ வீணாய்
அதை யோசித் துனது ஆத்துமம் பேணாய் - ஆகா
2. புகை போல் பறக்குதே புகலற்ற வாணாள்
திகையாதேசு பதம் தேடிக்கொள் இந்நாள் - ஆகா
3. புல்லோ புல்லின் கண் பூவோ இவ்வாணாள்
கல்லோ அதையுற்றுக் கவனிப்பாயானாள் - ஆகா
Comments
Post a Comment