கல்லான நெஞ்சை இன்றே மாற்றுவீர் - ஐயா
159. இராகம் (மகனே உன்னெஞ்செனக்கு) (187)
பல்லவி
கல்லான
நெஞ்சை இன்றே மாற்றுவீர் - ஐயா
கல்வாரி
அன்பை என்னில் ஊற்றுவீர்
1. கற்பாறை போன்ற எந்தன் கல் நெஞ்சே - அது
பற்பல தீமைகளைச் செய்யுதே - கல்லான
2. கீழ்ப்படியாத என் கல்நெஞ்சை - ஐயோ
கீழ்ப்படியப் பண்ண மாட்டீரோ - கல்லான
3. என்ன போதனை கேட்டும் கல் நெஞ்சில் - சுவாமி
ஒன்றும் தங்கி பலன் காணேனே - கல்லான
4. தினமும் திரு வசனத்தை வாசித்து - நெஞ்சில்
அனலும் அருளும் பெறவில்லையே - கல்லான
Comments
Post a Comment