25 May 2018

ஜீவாதிபதி இதோ! ஜெயங்கொண்டே எழுந்தார்


92. இராகம் (பூசத்ரபதிகல்யாணி சபாமணி)                        

பல்லவி

          ஜீவாதிபதி இதோ! ஜெயங்கொண்டே எழுந்தார்
            தேவாதி தேவன் பாத திருவடி பணிவோம்

அனுபல்லவி

            பக்தாள் யாரும் வாரும் பாடிப்போற்றுவோம்
            உத்தம இயேசு பாதம் பக்தியாய் பணிவோம்

1.         கல்லறை தனைவிட்டு வல்லவர் எழுந்தார்
            நில்லாமல் அவர் சாட்சி சொல்லியே சாற்றுவோம்
           
2.         எத்தன் என்றவர் ஓடபக்தர் துதிபாட - நம
            தத்தன் எழுந்தானின்று துத்தியம் செய்வோமே

3.         முச்சத்துரை மிதித்து ரட்சகர் எழுந்தார்
            அச்சம் பயம் நீக்கி நிச்சயமே தந்தார்

4.         சத்ய சசையின் வித்தே! சபையின் நாயகமே
            பக்தர் அகத்தின் முத்தே பாவியின் தாரகமே

5.         ஆசீர்வாதம் தாரும் அருமை யேசுநாதா
            வாசமலர் சூடி வாழ்த்தியே போற்றுகிறோம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...