காவில்நீர்பட்ட ஆத்துமக்கஸ்தியை


57. நாதனாமக்கிரியை         சாப்பு தாளம் (48)

1.       காவில்நீர்பட்ட ஆத்துமக்கஸ்தியை
            கலகத்தால் பாய்ந்த குருசின் வேர்வையை
            தேவரீர் சின்னமாயங்கே பாவிபோல்
            சிறந்ததை அறிவேன் என் நேசரே இறந்ததை மறவேன்

2.         வனங்குமிறிட பூமி யதிர்ந்திட
            மன்னனாலயத்திரை ரண்டாய்க் கிழிந்திட
            மரித்த பக்தர்கள் கல்லறை திறந்திட
            மானுவேல் மரித்தார் நமது ராஜன் ஜீவனை விடுவித்தார்

3.         கள்ளன்போல் திருவள்ளலைக் கட்டியே
            காவல்செய்து கற்றூணின் சேர்த்திறுக்கியே
            வெள்ளம்போல் ரத்தம் பீறிடவே தேகம்
            வேந்தனையடித்தார் அவர் வெகு சாந்தமாய் பொறுத்தார்

4.         தீதற்றவர் பெருஞ்சிலுவையைத் தூக்கியே
            சீரற்றவரால் கொலைக்களம் மேவியே
            மாசற்றவர் பாதம் மாதம் புலம்பவே
            வல்லவன் நடந்தார் பலபுத்தி சொல்லியே விரைந்தார்

5.         கரங்களாணி கடாவிய காயமும்
            கரமும் சிதைத்திட புதைத்த முண்முடியுடன்
            விலாவில் ஈட்டியால் துளைத்த வதையோடு
            விமலனே ஏங்கினார் சிலுவையில் கவலையாய் தொங்கினார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு