28 May 2018

அந்தோ காண்கிறேன் எனதருமை ரட்சகர் சமுக சன்னிதி

கைப்பிரதி:124

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

124. பியாகு                                                                       ஆதி தாளம்  (105)

 

                             பல்லவி

 

                    அந்தோ காண்கிறேன் எனதருமை ரட்சகர் சமுக சன்னிதி

                        ஆ! பார் போவோம் வா வா நேசா

 

1.         சுந்தரசீலமும் சுகந்த வாசமும் இந்திர நீலமும்

            இதர கோலமும், கலந்த காட்சி கலந்த காட்சி - அந்தோ

 

2.         கேரூபின் கூடுது சேராபீன் பாடுது பேரோசையோடு

            பேரோசையாகுது, சிறந்தகாட்சி சிறந்த காட்சி - அந்தோ

 

3.         பன்னிருவாசலும் பளிங்கு வீதியும் மின்னொளி கற்களும்

            மூப்பர் சூழ்தலும், என்னபகட்டு, என்னபகட்டு - அந்தோ

 

4.         இரத்தச் சாட்சிகளும் நன்முனிவர்களும் சுத்தர்கள் தீர்க்கரும்

            தூயசீடரும், பந்தி பந்தியாய், பந்தி பந்தியாய் - அந்தோ

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...