தாசர் போற்றும் நேசா - எம் வாடாதின்பமே


71.

பல்லவி

          தாசர் போற்றும் நேசா - எம் வாடாதின்பமே

அனுபல்லவி

            பாசத்தால் பரிசமிட்ட ஆசை மணவாளா
            நாசவுலகில் எந்தனை அதரிக்கும் நாதா          - தாசர்

1.         நாதனும்மை நானிலத்தில் நாடிப்பின் செல்வேன்
            மாயமான யாதுமின்றி அண்டிக்கொள்ளுவேன்
            சாகரத்தில் நாதனும்மை நான் மறந்திடேனே
            நாயகனாய் நடப்பதால் நன்றி மறவேனே - தாசர்

2.         இன்பரின் இனிய சத்தம் இன்பமீயுமே
            நிர்மலனே இன்பமொழி இன்று கூறுமே
            இவ்வுலகம் ஈயுமின்பம் இதற்கினையில்லையே
            திராட்ச ரசத்திலும் இன்பம் தித்திக்குமென்தேனே        - தாசர்

3.         இன்ப துன்ப நேரத்திலும் இன்பமவரே
            இன்றுமென்றும் மாறாச் செல்வம் நல்ல ஏசுவே
            விண்ணின்பம் இங்களித்தார் என்ன இன்ப பாக்கியம்
            ஈயுமோ இம்மாய வாழ்வு இவ்வித சலாக்கியம்                - தாசர்

4.         மாய லோகம் ஆஸ்தி செல்வம் மாறிப் போய்விடும்
            வல்லரசு எனக்கென்றும் நல்ல தாரகம்
            எல்லாவற்றும் எல்லாமாக ஏற்றுக்கொள்ளுவேனே
            நாயகனும் நண்பனுமென் நாவிற்கு நல்தேனே                - தாசர்

5.         மன்னா உம்மைக் காணுததற்கு வாடுதே மனம்
            எண்ணி எண்ணி நேசத்தினால், சோகமடைந்தேன்
            தன்னைத் தந்து என்னை மீட்ட எந்தன் ஜீவநாதா,
            மண்ணதிலும் விண்ணதிலும் அன்பின் ஜீவா வாவா      - தாசர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு